11th class public examination results 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14 ம் தேதி வெளியாகும் தேர்வு துறை அறிவிப்பு
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் – 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிடப்படவுள்ளது.
இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 9:40 மணிமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி:- கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-
CLICK HERE www.tnresults.nic.in
CLICK HERE www.dge1.tn.nic.in
CLICK HERE www.dge2.tn.nic.in
என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.
11 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myapp194f6a