TamilNadu News

Actor Pradeep Vijayan பிரபல குணசித்திர நடிகர் பிரதீப் விஜயன் மரணம் பூட்டிய வீட்டிற்க்குள் சடலமாக மீட்பு

Actor Pradeep Vijayan பிரபல குணசித்திர நடிகர் பிரதீப் விஜயன் மரணம் பூட்டிய வீட்டிற்க்குள் சடலமாக மீட்பு

Actor Pradeep Vijayan
Actor Pradeep Vijayan

தெகிடி மீசையை முறுக்கு இரும்பு திரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப். தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக பல படிங்களில் நடித்துள்ளார். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சென்னை பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் பிரதீப் விஜயன் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. எனவே அவர் வீட்டில் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு அவருடைய நண்பர்கள் இரு நாட்களாக போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த நண்பர் ஒருவர், பிரதீப் விஜயனின் வீட்டுக்கு போய் பார்த்த போது அவரது வீட்டுக் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த நண்பர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் வந்தனர். கதவை உடைத்து உள்ளே போய் பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.கழிவறையில் இறந்த நிலையில் கிடந்தார் இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Actor Pradeep Vijayan

Related Articles

Back to top button