TamilNadu News

Actor Ajith பட்டு வேட்டி சட்டையில் திருப்பதியில் தரிசனம் செய்த அஜித் வைரல் புகைப்படம்

Actor Ajith பட்டு வேட்டி சட்டையில் திருப்பதியில் தரிசனம் செய்த அஜித் வைரல் புகைப்படம்

Actor Ajith
Actor Ajith

நடிகர் அஜித் பட்டு வேட்டி சட்டை அணிந்து, இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இதில் ’விடாமுயற்சி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் ஷெட்யூலும் நிறைவடைந்தது. ’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் அஜர்பைஜானில் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இருக்கிறார் அஜித்.

அதற்கு முன்பாக இன்று அதிகாலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.விஐபி சுவாமி தரிசனத்தில் பட்டு வேட்டி சட்டையில் அஜித் சென்று தரிசனம் செய்துள்ளார்.

அப்போது அங்கு அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் பெருமாள் சிலை ஒன்றை அன்பு பரிசாகக் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Actor Ajith

more details Click

https://x.com/thiyagu8855/status/1802605686758703255

 

Related Articles

Back to top button