IMPORTANT NEWS

Free Sewing Machine Scheme 2024 பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Free Sewing Machine Scheme 2024 பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Free Sewing Machine Scheme 2024
Free Sewing Machine Scheme 2024

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் வழங்கும் திட்டம்:- கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான துணிகள், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 32 வெட்டும் மையங்களுக்கு ஜவுளி மற்றும் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மையங்களில் வெட்டப்படும் துணிகள், சீருடை தைக்க சம்பந்தப்பட்ட தையல் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, தைக்கப்பட்ட சீருடைகள் கல்வித்துறையின் 413 உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் 67 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்: சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், நலிவுற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மயமாக்கும் பொருட்டு மூலம் வலை பயன்பாடு தயாா் செய்யப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், நலிவுற்ற பெண்கள் இ-சேவை மையத்தில் வருமான சான்றிதழ் நகல் (ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும்), தையல் பயிற்சி சான்றிதழ் நகல் (6 மாதம் அல்லது அதற்கு மேல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்), பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது வயதுச் சான்றிதழ் (வயது 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்), ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவா் அல்லது ஊனமுற்றோா் எனில் அதற்குரிய சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்-

1. வட்டாட்சியரிடமிருந்துபெறப்பட்டவருமானச்சான்றுரூ. 72000/- ற்குள்

2.வட்டாட்சியரிடம்பெறப்பட்டஇருப்பிடச்சான்று

3.பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சிசான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்)

4.வயதுசான்று (20 முதல் 40 வயது வரை தகுதி )

5. சாதிச் சான்று

6. விண்ணப்பதாரரின் புகைப்படம் – 2 ( வண்ணபுகைப்படம் – கடவுச்சீட்டு அளவு)

7. விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று

8.ஆதார் அடையாள அட்டை.

Free Sewing Machine Scheme 2024

தமிழக அரசின் அறிவிப்பை பார்க்க CLICK HERE:-

https://x.com/CollectorErode/status/1805576339187286099

 

Related Articles

Back to top button