TamilNadu News

madurai road 500 note video சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள் அள்ளிச் சென்ற பொதுமக்கள் சிசிடிவி வீடியோ

madurai road 500 note video சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள் அள்ளிச் சென்ற பொதுமக்கள் சிசிடிவி வீடியோ

உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் சென்ற வாகனத்தில் இருந்து இந்த 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதை பார்த்த மக்கள் பலர் ஓடி சென்று ரூபாய் நோட்டுகளை அள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த செய்தி உசிலம்பட்டி வரை பரவி பலரும் ரூபாய் நோட்டுகளை எடுக்க மாமரத்துப்பட்டிக்கு படையெடுத்துள்ளனர்.

madurai road 500 note video
madurai road 500 note video

ஆனால் அதற்குள் அங்கிருந்த பலர் ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றதால் பின்னால் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து ரூபாய் நோட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ரூ.3 லட்சம் அளவிலான ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், எந்த வாகனத்தில் இருந்து ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக விழுந்துள்ளது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. மேலும் ரூபாய் நோட்டுகளை காணவில்லை என இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை.

madurai road 500 note video

சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/arunreporter92/status/1809638843513008587

Related Articles

Back to top button