மாதம் 15000 உதவித்தொகையுடன் யூகோ வங்கியில் 544 தொழில்பழகுநர் இடங்கள் அறிவிப்பு
யூகோ வங்கியில் 544 தொழில்பழகுநர் இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன் படி நாடு முழுவதும் உள்ள UCO வங்கியின் 544 தொழில்பழகுநர் இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 20 தொழில்பழகுநர் இடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொழில்பழகுநர் எனப்படும் வங்கி பயிற்சிக்கு ஆர்வமுள்ள டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த 1 ஆண்டு பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
UCO Bank தொழில்பழகுநர் பயிற்சிக்கு ரூ15,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
01.07.2024 ஆம் தேதியில் படி 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.
{SC/ST பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 15 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உள்ளது. மேலும் கணவரை இழந்த பெண்கள், கணவரைப் பிரிந்த பெண்களுக்கு கூடுதலாக 35 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.}
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
16.07.2024
விண்ணப்புக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க:
https://nats.education.gov.in
மேலும் விவரம் அறிய :
https://ucobank.com/
இப்பணியிடங்கள் குறித்த அதிகார பூர்வமான அறிவிப்புகள் யூகோ வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
uco bank apprenticeship 2024
மாதம்15000 உதவித்தொகையுடன் யூகோ வங்கியில் 544 தொழில்பழகுநர் இடங்கள் அறிவிப்பு