indian 2 review in tamil ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் – 2 திரைவிமர்சனம்
indian 2 review in tamil ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் – 2 திரைவிமர்சனம்
நடிகர்கள்:-
சித்தார்த், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர் விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, ஜெகன் , மனோபாலா, தம்பி ராமையா, மாரிமுத்து. காளிதாஸ் ஜெயராம், டெல்லி கணேஷ், ரேணுகா, கல்யாணி நடராஜன், தீபா சங்கர் மற்றும் பலர்
இசை:- அனிருத்
இயக்கம் :- ஷங்கர்
இந்தியன் 1 கதை:-
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் ஆகிலேயர்களை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் சேனாபதி (கமல்). நேதாஜி படையில் உள்ளார். இவரது மனைவி சுகன்யாவும் சுதந்திர போராட்ட வீரமங்கை. சேனாபதி ஒரு கட்டத்தில் வெள்ளையர்களிடம் பிடிபடுகிறார்.அதன்பின்பு சுதந்திரம் கிடைத்து வெளியே வருகின்றார் இவர்களுக்கு சந்திரபோஸ் மற்றும் கஸ்தூரி என இரு பிள்ளைகள். சந்திரபோஸ் குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலையில் சேர நினைக்க, அவரை கண்டிக்கிறார் தந்தை சேனாபதி. இதனால் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விடுகிறார் சந்திரபோஸ்
வீட்டில் திடீரென நடக்கும் விபத்தில் நெருப்பில் சிக்கிக்கொள்ளும் கஸ்தூரி உடல் கருகிய நிலையில் உயிர் போராடிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் லஞ்சம் தந்ததால் மருத்துவம் பார்ப்பேன் என மருத்துவர் கூற, ‘நான் ஏன் லஞ்சம் தரவேண்டும், அதை கொடுக்க மாட்டேன்’ என கூறுகிறார் சேனாபதி.இதனால் அவருடன் மகள் இறந்து போகிறார். லஞ்சம் ஊழல் என்கிற வார்த்தை தமிழ்நாட்டில் கேட்க கூடாது, இதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது என முடிவு செய்யும் சேனாபதி தன்னிடம் லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரிகளையும் வர்மகலி மூலம் கொள்கின்றார். இதனால் இந்தியன் தாத்தா பெயரை கேட்டாலே பயம் நிலவுகின்றது
இந்நிலையில் தனது மகன் லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்த தவறால் பல விபத்தில் பலர் பலி ஆகின்றார்கள். இதனால் தனது மகனையே கொள்ள முடிவு செய்கிறார் சேனாபதி. இறுதியில் லஞ்சம் வாங்கி தவறு செய்த தனது மகனை கொலை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ஆனால், மீண்டும் தவறு நடந்தால் இந்தியன் வருவான் என இறுதியில் எச்சரித்து இருந்தார்.
இந்தியன் 2 கதை:-
1996-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்ட இந்தியன் படம் 28 ஆண்டுகளுக்கு பின்பும் இந்தியன் முதல் பாகத்தில் பேசப்பட்ட அதே கருவையே இன்றைய ஊழல்களுடன் பொருந்திய கதையாக இயக்குநர் ஷங்கர் உருவாக்கியுள்ளார்.
பார்க்கிங் டாக்ஸ்’ எனும் யூடியூப் சேனலை சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்டோருடன் நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களையும் நாட்டில் நடக்கும் அவலங்களை, லஞ்சங்களை, குற்றங்களை தங்கள் யூ டியூப் சேனல் மூலமாக கேளிக்கையாகவும், கிண்டலாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் வீடியோக்கள் மூலமாக சில அவலங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றார் ஆனால், கைதாகும் அதிகாரிகள் உடனே சிறையிலிருந்து வெளிவருவதும் மீண்டும் பழையபடி லஞ்சம் வாங்கத் துவங்குவதுமாக இருக்கிறார்கள். இதைப் பார்த்து மனம்நோகும் சித்தார்த், ஊழலைச் செய்பவர்களுக்கு நாம் இப்படி பேசினால் கேட்காது, கேட்கிற மொழியில் பேச வேண்டும் என ஆத்திரப்படுகிறார்.
நாட்டின் தற்போதைய சூழலை எடுத்துச் சொல்லி எதையும் மாற்ற முடியாது என்று கூறுவதால் மனம் உடைகிறார் சித்தார்த். இதையனைத்தும் மாற்ற, லஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிக்க இந்தியன் தாத்தா மாதிரி ஒருத்தர் வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் இந்தியன் தாத்தாவை மீண்டும் அழைக்க நினைக்கிறார் சித்தார்த். அதனை தொடந்ர்து #Comeback Indian ஹாஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை துவங்குகிறார்கள்.
அவர்களின் சமூக வலைதள பிரச்சாரம் தைவானில் மார்ஷியல் ஆர்ட்ஸ் குருவாக இருக்கும் இந்தியன் தாத்தா கண்ணில் படுகிறது. அந்த வீடியோ பார்க்கும் காளிதாஸ் ஜெயராம் பார்க்க உடனே அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். ஊழலுக்கு எதிரான தன் போராட்டத்தை தொடர இந்தியாவுக்கு கிளம்பி வருகிறார் சேனாபதி.
இந்தியா வந்த அவர் உங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, ஊழல் செய்தால் அவர்களை எக்ஸ்போஸ் செய்யுமாறு நாட்டில் இருக்கும் இளைஞர்களை வலியுறுத்துகிறார் அவர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக அவர்களை போட்டு தள்ளுகின்றார் இந்தியன் தாத்தா . மறுபக்கம் சேனாபதியை தேடிக் கொண்டிருக்கும் விசாரணை அதிகாரிகளும் அவரை நெருங்குகிறார்கள். அதிகாரிகள் கையில் சிக்காமல் லஞ்சம், ஊழலை ஒழித்தாரா? அதற்காக இந்தியன் தாத்தா கையில் எடுத்த திட்டம் என்ன? என்பதே கதை.