TamilNadu News

Press Button To Die 2024 தற்கொலை செய்து கொள்ள நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு அனுமதி அளித்த சுவிட்சர்லாந்து அரசு முழு விவரம்

Press Button To Die தற்கொலை செய்து கொள்ள நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு அனுமதி அளித்த சுவிட்சர்லாந்து அரசு முழு விவரம்

சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுடைய விருப்பத்துடன் கருணை கொலை செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கின்றது சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்துகொள்ள அரசு அனுமதி வழங்கும் சட்டம் அமலில் உள்ளது.

தி லாஸ்ட் ரிசார்ட் என அழைக்கப்படும் ஒரு அமைப்பு, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்கோ என்ற புதிய தற்கொலைப் பாட் எனப்படும் கருவியை தயார் செய்துள்ளது. இதற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இது அடுத்த மாதத்திற்கு பின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில், ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான சரியான காரணத்தை தெரிவித்தாலோ அல்லது அவரது மரணத்திற்கு காரணமான காரணியை நிரூபித்தாலோ அவர் தற்கொலை செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார்.

Press Button To Die
Press Button To Die

அந்த இயந்திரத்தில் ஏறி படுத்ததும் நீங்கள் சாக விரும்பினால் பட்டனை அழுத்தவும் என்ற குரல் வந்ததும் பட்டனை அழுத்தினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் வலியின்றி உயிர் பிரிந்துவிடுமாம். பட்டனை அழுத்தியதும் ஆக்சிஜன் வாயும் குறைக்கப்பட்டு நைட்ரஜன் வாயும் நிரப்பப்படுவதால் ஹைபோக்சியா பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டு மயங்கிய நிலையிலேயே உயிர் பிரிந்துவிடுமாம். அதாவது இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்பவர்கள் வலியின்றி இறந்துவிடுகிறார்கள்.

Press Button To Die

தற்கொலை இயந்திரம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/grenier_actu/status/1814375026109657547

Related Articles

Back to top button