home delivery ration ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
home delivery ration ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, சீனி மற்றும் இலவசமாக் அரிசி விட்ட பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் பொருட்களை வீடு வீடாக கொண்டு போய் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் விரைவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வீடாக டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டோர் டெலிவரி செய்ய பொருட்களை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும். இதனால் பொருட்கள் வீணாகாமல் மக்களுக்கு சரியான அளவில் கிடைக்கும். இதற்காக 6 மில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கி வரும் 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.