IMPORTANT NEWS

pmsby scheme details in tamil ரூ 20 மட்டுமே பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு

pradhan mantri suraksha bima yojana in tamil

pmsby scheme details in tamil பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) ஆகியவை மிகக்குறைந்த விலையில் காப்பீடு மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய அரசு திட்டங்கள் ஆகும்.

pmsby scheme details in tamil
pmsby scheme details in tamil

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் 9 மே, 2015 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. வங்கி முதன்மை பாலிசி வைத்திருப்பவர் என்பதால், சந்தாதாரர்களுக்கு தனி பாலிசி வழங்கப்படாது.

1. பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY)திட்டம்:-

பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY) என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. எந்த காரணத்திற்காக மரணம் நிகழ்ந்தாலும் இறப்பிற்கு பின் இழப்பீடு வழங்குகிறது.

தகுதி:- 18-50 வயதுக்குட்பட்ட தனிநபர் வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய முடியும். 50 வயதைத் தொடும் முன் திட்டத்தில் சேரும் நபர்கள், வழக்கமான பிரீமியத்தைச் செலுத்தினால், 55 வயது வரையிலான ஆயுள் காப்பீட்டைத் தொடரலாம்.

பலன்கள்:- ஆண்டுக்கு ரூ 436/- பிரீமியம் செலுத்துவோருக்கு, ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காப்பீடாக ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்தல்: இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய வங்கிக் கிளையை அல்லது வங்கியின் இணைய சேவையைத் தொடர்பு கொள்ளலாம். தபால் அலுவலக சேமிப்பு வங்கிக் கணக்காக இருந்தால் தபால் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

இந்தத் திட்டத்திற்கான பிரீமியம், கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படுகிறது. திட்டம் மற்றும் படிவங்கள் பற்றிய விரிவான தகவல்கள் https://jansuraksha.gov.in இல் கிடைக்கின்றன.

pmsby scheme details in tamil
pmsby scheme details in tamil

2. பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம்:-

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒரு வருட விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்திற்க்கு காப்பீடு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தகுதி:- 18 முதல் 70 வயது வரையில் உள்ள, தனி நபர் வங்கி கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு வைத்திருப்போர், இத்திட்டத்தில் சேர தகுதி உடையோர். பயன்கள்: ஆண்டுதோறும் ரூ. 20 ஐ காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால், விபத்தால் இறப்போர் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ. 2 லட்சம் (சிறிதளவு ஊனத்திற்கு ரூபாய் 1 லட்சம்) வழங்கப்படும். திட்டத்தில் சேர்தல்: குறிப்பிட்ட வங்கியின் கிளை/ இணையதளம் அல்லது அஞ்சலக அலுவலகத்திற்கு நேரில் சென்று திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் கீழ், கட்டணத் தொகை, கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து கட்டாயத்தின் அடிப்படையில் ஒருமுறை ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரரின் வங்கி கணக்கிலிருந்து தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

திட்டம் குறித்த கூடுதல் தகவல்களும், படிவங்களும் https://jansuraksha.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன விண்ணப்பிப்பது எப்படி:- உங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியில் சென்றும் இத்திட்டத்தை தொடங்கலாம்.

3. அடல் ஓய்வூதிய திட்டம்:-

அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நாடு தழுவிய சமூக பாதுகாப்பு அமைப்புமுறையை உருவாக்குவதற்காக அடல் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அமைப்புசாரா துறையில் உள்ள மக்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கவும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அரசு மேற்கொண்ட முன்முயற்சி இது. தேசிய ஓய்வூதிய அமைப்புமுறையின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் நிறுவன கட்டமைப்பின் கீழ் ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அடல் ஓய்வூதியத் திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.

தகுதி:- வருமான வரி செலுத்தாத 18 முதல் 40 வயது வரையிலான வங்கிக் கணக்கு உள்ள அனைவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதியுடையோர் ஆவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் பங்களிப்புகள் வேறுபடும்.

பயன்கள்:- இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு 60 வயதிற்கு மேல், சந்தாதாரர்களின் பங்களிப்பின் அடிப்படையில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000/- அல்லது ரூ.2000/- அல்லது ரூ. 3000/- அல்லது ரூ. 4000/- அல்லது ரூ. 5000/- உத்தரவாத ஓய்வூதியமாக அவர்களுக்கு வழங்கப்படும்.

திட்டத்தின் பயன்களின் விநியோகம்:- மாதாந்திர ஓய்வூதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவரது காலத்திற்குப் பிறகு அவரது துணைவருக்கும், அதற்குப் பிறகு சந்தாதாரரின் 60-ஆவது வயதில் பெறப்பட்ட ஓய்வூதியத் தொகை அவரால் நியமிக்கப்பட்ட நபருக்கும் திருப்பி அளிக்கப்படும். சந்தாதாரர் ஒருவேளை 60 வயதிற்கு முன்பு மரணிக்க நேர்ந்தால், அவரது 60 வயது வரையிலான காலத்திற்கு உரிய தொகையை சந்ததாரரின் துணைவர், அடல் ஓய்வூதிய திட்ட கணக்கில் மீதமுள்ள காலத்துக்கு தொடர்ந்து பங்களிக்க முடியும்.மத்திய அரசின் பங்களிப்பு: குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். அதாவது பங்களிப்புகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட தொகை, முதலீட்டில் மதிப்பிடப்பட்ட தொகையை விட குறைவாக இருந்து, குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்க போதுமானதாக இல்லாமல் இருந்தால், அத்தகைய பற்றாக்குறை நிதியை மத்திய அரசு வழங்கும். மாற்றாக, முதலீட்டின் அடிப்படையிலான வருமானம் அதிகமாக இருந்தால், மேம்பட்ட ஓய்வூதிய பயன்களை சந்தாதாரர்கள் பெறுவார்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய கால அளவு:- மாதாந்திர/ காலாண்டு/ அரையாண்டு விகிதத்தில் அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான பங்களிப்புகளை சந்தாதாரர்கள் செலுத்தலாம்.திட்டத்திலிருந்து தொகையை பெற்றுக் கொள்ளுதல்: சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அடல் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து சந்தாதாரர்கள் தாமாகவே வெளியேறிக் கொள்ளலாம். அத்தகைய நிலையில் அரசின் இணை பங்களிப்பு மற்றும் வட்டி குறைத்துக் கொள்ளப்படும்.

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) Scheme: PMJJBY is a one-year life insurance scheme renewable from year to year offering coverage for death due to any reason.

Eligibility: Persons in the age group of 18-50 years having an individual bank or a post office account are entitled to enroll under the scheme. People who join the scheme before completing 50 years of age can continue to have the risk of life covered up to age of 55 years upon payment of regular premium.

 

Benefits: Life cover of Rs. 2 Lakh in case of death due to any reason against a premium of Rs. 436/- per annum. Enrolment: Enrolments under the scheme can be done by visiting the branch/ BC point or website of the bank of the account holder or at the post office in case of post office savings bank account. The premium under the scheme is auto debited every year from the subscriber’s bank account based on a one-time mandate from the account holder. Detailed information about the scheme and the forms (in Hindi, English and Regional languages) are available on https://jansuraksha.gov.in. Achievements: As on 26.04.2023, the cumulative enrolments under the scheme have been more than 16.19 crore and an amount of Rs. 13,290.40 crore has been paid for 6,64,520 claims.

pmsby scheme details in tamil

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://jansuraksha.gov.in

pmsby

pmsby full form

pm jeevan jyoti bima yojana

pradhan mantri jeevan jyoti bima yojana

pradhan mantri suraksha bima yojana

pmsby scheme

pmsby scheme details

pmsby premium

p m suraksha bima yojana

pradhan mantri bima yojana

pm suraksha bima yojana

pmjjby premium 436 plan details

jeevan jyoti bima yojana

pmsby certificate download

pmsby means

pmsby policy

pm bima yojana

pm jeevan jyoti yojana

pmsby kya hai

pradhan mantri jeevan jyoti yojana

Related Articles

Back to top button