delhi police arrested spider man ஸ்பைடர்மேனை கைது செய்து ரூ 26000 அபராதம் விதித்த டெல்லி போலீஸ்
இன்ஸ்டாகிராமில் பதிவிட ஸ்பைடர்மேன் செய்த சாகசம்
ஸ்பைடர்மேனை கைது செய்து ரூ 26000 அபராதம் விதித்த டெல்லி போலீஸ்
டெல்லி துவாரகா சாலையில் கார் பானட்டில் அமர்ந்திருந்ததால் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ‘ஸ்பைடர் மேன்’ உடையில் இருந்த ஒருவரை டெல்லி போலீஸார் (நேற்று) புதன்கிழமை அன்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் புகார் வந்ததையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்பைடர்மேன் உடையில் இருந்தவர் நஜாப்கரில் வசிக்கும் ஆதித்யா (20) மற்றும் வாகனத்தை ஓட்டி வந்தவர் மகாவீர் என்கிளேவில் வசிக்கும் கவுரவ் சிங் (19) என்பது தெரியவந்தது.
மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிட இது போன்ற வீடியோக்களை எடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது
அபாயகரமான வாகனம் ஓட்டுதல், மாசு சான்றிதழின்றி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது அதிகபட்ச அபராதம் ரூ. 26,000 மற்றும்/அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் என தெரிவித்துள்ளது.
இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர்வுமன் ஆடைகளை அணிந்த ஒரு ஜோடி, தென்மேற்கு டெல்லியின் துவாரகாவின் தெருக்களில் ‘டைட்டானிக் போஸ்’ செய்து மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் செய்தவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது .
மேலும் கைது செய்யப்பட்ட ஜோடி ஹெல்மெட் இல்லாமல், கண்ணாடி இல்லாமல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் நம்பர் பிளேட்டைக் காட்டாமல் இருப்பது ,உரிமம் இல்லாத குற்றங்களுக்காக மோட்டார் வாகன (MV Act) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
delhi police arrested spider man