NATIONAL NEWS

pradhan mantri awas yojana ரூ 267000 மானியத்துடன் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இலவச வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி

பிரதமர் ஆவாஸ் யோஜனாவில் வீடு கட்ட ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ரூ 267000 மானியத்துடன் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இலவச வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி

பிரதமர் ஆவாஸ் யோஜனாவில் வீடு கட்ட ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இது ஒரு மத்திய அரசு திட்டமாகும்.ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும்.மொத்த மதிப்பீடு ரூ.170000 ஆகும்.

இதில் மத்திய அரசு நிதி (ரூ.72,000) + மாநில அரசு நிதி (ரூ.48,000) + மேற்கூரை அமைக்க மாநில கூடுதல் நிதி (ரூ.50,000).மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12,000/- மதிப்பிலான கழிப்பறை கட்டிதரப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழான மனிதசக்தி நாட்களை கொண்டு 90 நாட்களுக்கு வீடு கட்டப்படுகிறது. (90 X ரூ.205 = ரூ.18450)சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

pradhan mantri awas yojana
pradhan mantri awas yojana

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் தரமான வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

http://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும். மெயின் மெனுவின் கீழ் உள்ள ‘Citizen Assessment’ என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும். உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.

உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பிரதமர் ஆவாஸ் யோஜனாவில் வீடு கட்ட ஆன்லைனில் விண்ணப்பிக்க:

CLICK HERE

pradhan mantri awas yojana

Related Articles

Back to top button