CINEMA

boat movie review tamil சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியாகி உள்ள போட் திரைபடம் விமர்சனம்

boat movie review tamil சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியாகி உள்ள போட் திரைபடம் விமர்சனம்

boat movie review tamil
boat movie review tamil

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியாகி உள்ள போட் திரைபடம் விமர்சனம் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் போட்.

நடிகர்கள்:-

யோகிபாபு எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான் , சாம்ஸ், ஷாரா, ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா, லீலா மற்றும் பலர் நடிப்பில்

கதை:-

1943ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் படத்தின் கதை அமைகிறது. சுதந்திரப் போராட்டம் நடக்கும் காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருக்கும்போது மெட்ராஸ் மீது ஜப்பான் நாடு குண்டு போடப்போகிறது என்கிற செய்தி வெளியாகிறது. இதில் கடற்கரை அருகே உள்ள முகாமை நோக்கி ஜப்பானிய விமானப்படை குண்டு போடப்போறாங்க என ஒரு தகவல் தீயாக பரவுகின்றது .சில இடங்களில் குண்டும் விழுகிறது. அப்போது மக்கள் எல்லோரும் தப்பிக்க நினைக்கிறார்கள். படகில் ஏறி கடலுக்குள் சென்று விட்டால் நிலத்தில் தான் குண்டு போடுவார்கள் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்.

யோகி பாபு தன் அம்மா லீலா உடன் தன்னுடைய சொந்த படகில் நடுகடலுக்கு செல்ல திட்டமிடுகிறார். அவர் செல்லும் போது திடீரென கௌரி அவரின் தந்தை சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், ஷாரா, மதுமிதா, அக்க்ஷத் உள்ளிட்டோரும் படகில் ஏறி விடுகின்றனர்.இந்தப் படகில் 7 நபருக்கு மேல் செல்ல முடியாது . ஆனால் 9 பேர் இருக்கின்றார்கள்.

வேறொரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் அவரின் படகு விபத்துக்குள்ளானதில் இவர்களை மிரட்டி இந்த படகில் ஏறி கொள்கிறான். இப்படி 10 பேர் பயணம் தொடரும் போது ஆங்கிலேயன் ஜெஸ்ஸிக்கு படகில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என தகவல் வருகிறது. யோகி பாபு படகில் ஏறிய அந்த தீவிரவாதி யார்? படகில் யாரெல்லாம் ஏறினார்கள். அவர்களின் பின்னணி என்ன?. படகில் என்ன நடந்தது?. சென்றவர்கள் பிழைத்தார்களா இல்லையா? என்பதுதான் படத்தின் கதை

boat movie review tamil

டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button