Temple For The Alien உலகில் முதல் ஏலியன் கோவில் – வேற்றுகிரக மனிதன் ஏலியனுக்கு கோவில் கட்டிய நபர் முழு விவரம்
இந்தியாவில் ஏலியனுக்குக் கோவில் கட்டிய நபர்
Temple For The Alien உலகில் முதல் ஏலியன் கோவில் வேற்றுகிரக மனிதன் ஏலியனுக்கு கோவில் கட்டிய நபர் முழு விவரம்
சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.
குஷ்பு, ரஜினி, மோடி வரிசையில் ஏலியனுக்கு நபரொருவர் கோவில் கட்டி வழிபாடு செய்துவருகின்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்துள்ள மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்த கோயிலை லோகநாதன் என்ற சித்தர் பாக்யா நடத்தி வருகிறார்.இந்த கோவிலில் ஏலியனுக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே ஏலியனுக்காக சன்னிதி அமைக்கப்பட்ட ஒரே கோவில் இது மட்டுமே என்றும் சொல்லியுள்ளார் லோகநாதன்.இந்த கோயிலை அமைப்பதற்கு முன்பாக ஏலியன் தெய்வங்கள் அனுமதி பெற்று அவர்கள் அனுமதி கொடுத்ததால் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த கோவிலை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எங்கும் ஏலியன் சித்தர் இல்லை என்றும் இங்குதான் உள்ளது என லோகநாதன் தெரிவித்துள்ளார். தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் குறைந்த அளவு பூஜை நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் அவர்கள் பார்ப்பதற்கு ஏலியன் போன்று இருக்க மாட்டார்கள் எனவும் நம்மைப் போன்று சாதாரண தோற்றத்தில் ஆண்,பெண் என இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.உலக நாடுகள் அனைத்தும் ஏலியனை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஆனால் வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள், ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்ய மாட்டார்கள்,அவர்களிடம் அளவில்லாத சக்தி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கோவில் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.