stunt in moving train ஓடும் ரயிலில் ஸ்டண்ட் செய்து ஒரு கை காலை இழந்த வாலிபர் வைரல் வீடியோ
ஓடும் ரயிலில் ஸ்டண்ட் செய்து ஒரு கை காலை இழந்த வாலிபர் வைரல் வீடியோ
மஹாராஷ்டிர மாநிலம் வடாலா அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் ஃபர்ஹத் ஆசம் ஷேக். இவர் ஓடும் ரயில்களில் கம்பியைப் பிடித்தபடி நடைமேடையில் கால்கள் தேய்த்தபடி ஸ்டண்ட் செய்து, அதனை வீடியோவாக எடுத்து, லைக்குகளுக்காக தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இதே போன்று ஒரு ரயிலில் சாகசம் செய்யும் வீடியோ சில நாட்களுக்கு முன் வைரலானதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் (RPF) அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வதற்காக ஃபர்ஹத் ஆசம் ஷேக் விடை கண்டுபிடித்து சென்றபோது, ரயில்வே போலீஸ் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு கை, ஒரு காலை இழந்து அமர்ந்திருந்த ஃபர்ஹத் ஆசம் ஷேகை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை விசாரித்தப்போது மஸ்ஜித் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஸ்டண்ட்செய்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாகவும். ரயில்வே ஊழியர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தாகவும் , பலமான காயம் அடைந்ததால் அவரது ஒரு கை , கால் மருத்துவர்கள் வெட்டி எடுத்ததாகவும் கூறினார்.
கை, காலை இழந்த ஃபர்ஹத் ஆசம் ஷேக், யாரும் நான் செய்தது போல ஸ்டண்ட் செயல்களை செய்யாதீர்கள் இது போன்ற செயல்கள் சட்டவிரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.
வைரல் வீடியோ பார்க்க: