CINEMA

actor king kong mother passed away நடிகர் கிங் காங்கின் பிறந்தநாளில் மகனுக்கு வாழ்த்து கூறிவிட்டு மரணம் அடைந்த தாய் முழு விவரம்

actor king kong mother passed away நடிகர் கிங் காங்கின் பிறந்தநாளில் மகனுக்கு வாழ்த்து கூறிவிட்டு மரணம் அடைந்த தாய் முழு விவரம்

 

actor king kong mother passed away
actor king kong mother passed away

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவருடைய இயற்பெயர் ‘சங்கர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இன்று அதிகாலை நடிகர் கிங்காங் அவர்களின் தாயார் காசி அம்மாள் வயது 72 மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி தேதி நடிகர் கிங் காங்கின் பிறந்த நாளுக்கு அதிகாலை 12.30 மணிக்கு நடிகர் கிங் காங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூட அவரது தாயார் தெரிவித்திருக்கிறார்.

அதற்குப் பிறகு சற்று நேரத்தில் அவர்கள் தாயார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலம் ஆகியுள்ளார். நடிகர் கிங் காங்கின் தாயார் இறப்பிற்க்கு  உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

actor king kong mother passed away

Related Articles

Back to top button