healthrecipes

benefits of fig in tamil அத்திக்காயின் பயன்கள் மற்றும் சமைக்கும் முறை

அத்திக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

அத்திக்காயின் பயன்கள் மற்றும் சமைக்கும் முறை

ஆங்கிலத்தில் ஃபிக் (Fig) என்று அழைக்கப்படும் அத்திக்காய் , மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாகும் . பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க கூடிய .அத்திக்காய் குளிர்ச்சி சுபாவம் கொண்டது மேலும் துவர்ப்பு சுவையுடையது.

அத்திக்காயின் முக்கியமான ஊட்டச்சத்துக்கள்:

நார்ச்சத்து ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் வைட்டமின் ஏ, பி, கே நிரைந்து உள்ளது

benefits of fig in tamil
benefits of fig in tamil

அத்திக்காயின் பயன்கள்:

அடிக்கடி அத்திக்காயை உணவில் சேர்த்து கொண்டால்  மலச்சிக்கல் நீங்கும், மூலநோய் வராமல் தடுக்கும், சீதபேதியை குணமாக்கும் , வாயு தொல்லையை  போக்கும் , ரத்த மூலத்தை குணப்படுத்தும் தன்மை உடையது. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்கவும்  உதவும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை நிறுத்தும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது- நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து, மலச்சிக்கலைத் தடுக்கிறது.மாதம் ஒரு முறையாவது அத்திக்காய்  சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும்.

உடலிலுள்ள ரணங்களை ஆற்றக் கூடியது- அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாகும் . வயிற்றில் புண் இருந்தால்  அத்திக்காயை உணவுகளில் சேர்த்துக் கொண்டாலே  நல்ல பலனை பெறலாம் .

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது- கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது- கால்சியம் மற்றும் வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு- இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது.

வீக்கத்தை எதிர்க்கிறது- உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது- நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. 

அத்திக்காய் கூட்டு:அத்திக்காயை சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சமைக்க ஒரு எளிய வழி கூட்டு செய்வதாகும்.

தேவையான பொருட்கள்:

அத்திக்காய் 100 கி

கடுகு,

சீரகம்,

பெருங்காயம்,

பூண்டு 4-5 பல்

தனியா தூள் – 1/2 தேக்கரண்டி 

கடலை பருப்பு 1 கை பிடி அலவு

மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

மஞ்ள் தூள் சிரிது அலவு

உப்பு

தாளிக்க: கடுகு,கருவேப்பிலை,கொத்தமல்லி தழை – சிறிதளவு

 செய்முறை:

அத்திக்காயை நன்கு கழுவி, (அத்திக்காயின் நடுவில் பூச்சி மற்றும் பூழு இருக்கலாம் அதை  கவனித்து சுத்தப்படுத்த வேண்டும்) சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் அல்லது 1-2ஆக இடித்து கோள்ளவும் . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அத்திக்காய் துண்டுகள்,  கடலை பருப்பு , 1/4 தேக்கரண்டி சீரகம்,மஞ்ள் தூள், பெருங்காயம், பூண்டு,தேவைக்கு ஏற்ப்ப உப்பு சேர்த்து  வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் காய்ச்சி, கடுகு,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்த அத்திக்காய் துண்டுகளை சேர்த்து, நன்கு கிளறவும். கொத்தமல்லி தழை தூவி, இறக்கவும். சூடான சாதத்துடன் இந்த அத்திக்காய் கூட்டை சேர்த்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் 1 வெங்காயன்1 சிறிய தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.

பச்சை அத்திக்காயை கிடைக்காத போது காய்ந்த அத்திக்காய் வற்றல் கடைகாளில் கிடைக்கும் அதை வாங்கி  எண்ணையில் பொரித்து சாப்பிடலாம் அல்லது அத்திக்காய் ஊறுகாயும் கிடைக்கிறது வாங்கிப் பயன்படுத்தி கொள்ளவும்.

இந்த தகவல் பொது அறிவு மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது, இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படாது.

benefits of fig in tamil

 

for more news updates click here

Related Articles

Back to top button