aavin factory accident ஆவின் பால் பண்ணையில் வேலை பார்த்த பெண்ணின் முடி மோட்டாரில் சிக்கி தலை துண்டான அதிர்ச்சி சம்பவம்
ஆவின் பால் பண்ணையில் வேலை பார்த்த பெண்ணின் முடி மோட்டாரில் சிக்கி தலை துண்டான அதிர்ச்சி சம்பவம்
திருவள்ளூர் ,காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் உமா ராணி(30) என்ற பெண் வேலை பார்த்து வந்தார் செவ்வாய்க்கிழமை (ஆக.20) அன்று வழக்கம்போல் பால் பண்ணையில் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று கொண்டு இருந்துள்ளது அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வரும் பால் பாக்கெட்டுகளை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக உமாராணியின் துப்பட்டா அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது,மேலும் நொடிப்பொழுதில் அவரின் தலை முடி இயந்திரத்தில் சிக்கி கொண்டதால் உமா ராணியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டது. அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துண்டானது.
இந்த கோர விபத்து ஆவின் தொழிற்சாலையில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆவின் தொழிற்சாலையில் உயிரிழந்த உமாராணி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதும்,காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருவரும் குடியிருப்பதாக தெரியவந்துள்ளது .மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
aavin factory accident