vazhai movie review tamil இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் எப்படி இருக்கு
vazhai movie review tamil நடிகர்கள்:- கலையரசன் , திவ்யா துரைசாமி, நிக்கிலா விமல், கர்ணன் ஜானகி, பொன்வேல், ராகுல் மற்றும் பலர் இசை:- சந்தோஷ் நாராயணன். இயக்கம்:- மாரி
கதை:- இந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளத்தில் சிவனைணாதான் தனது அம்மா மற்றும் அக்காவுடன் வாழ்ந்து வருகிறார். வாழை தாரை சுமந்து சென்று அதில் வரும் வருமானத்தில் பொங்கி சமைத்து, பிள்ளைகளை படிக்க வைத்து , இப்படி அன்றாட தேவைகளுக்காக மிகவும் சொற்ப கூலிக்காக வேலை செய்யும் கிராமத்தில் இருக்கும் குடும்பங்களில் ஒன்று சிவனைந்தான்( பொன்வேல்) வேம்பு ( திவ்யா துரைசாமி) அவர்களின் அம்மாவான ஜானகி (கர்ணன் ஜானகி)
என்னதான் சேட்டைகள் செய்தாலும் படிப்பில் கெட்டிக்காரன், வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்கூடம் சென்று வகுப்பில் எப்பொழுதும் முதல் மாணவனாக திகழும் சிவனைந்தான். பள்ளி விடுமுறை நாட்களில் தனது தாயின் வற்புறுத்தலினால் வாழைத்தார் சுமக்கும் தொழிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார் வீட்டின் வறுமை மற்றும் கடன் பிரச்சனையால்தான் படிக்கும் பிள்ளைகளுக்கு கூட இப்படி ஒரு நிலைமை ஏற்படுகிறது.
ஆனால், சிவனைணாதானுக்கு இதை செய்ய விருப்பமில்லை. இப்படியிருக்க வாழைத்தாரு வியாபாரியிடம் வேலை செய்யும் கலையரசன் தொழிலாளர்களுக்கு கூலியை ரூ. 1-ஆக உயர்த்தி தருமப்படி கேட்கிறார். முதலில் முரண்டு பிடிக்கும் வியாபாரி இறுதியில் அதற்கு ஒப்புக்கொண்டு, ஒரு வாழைத்தாருக்கு ரூ. 1 கூட்டி கொடுக்க சம்மதிக்கிறார். இந்நிலையில் ஒரு சனிக்கிழமை விடுமுறை நாளில் அம்மாவை ஏமாற்றி விட்டு, பள்ளிக்கு நடன ஒத்திகைக்கு சென்று விடுகிறான் சிவனைந்தன். அந்த சனிக்கிழமை நாளில் நடக்கும் துயரமான விஷயம் இதன்பின் என்ன நடந்தது என்பது தான் வாழையின் மீதி கதை.