kottukkaali movie review கொட்டுக்காளி திரைப்படத்தின் விமர்சனம் முழு விவரம்
kottukkaali movie review பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற படம். மேலும் ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால் அவரது அடுத்த படமான கொட்டுக்காளி மீது ஓர் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவில் இது தான் முதல் முயற்சி என்றே சொல்லலாம் டைட்டில் கார்டு முதல் என்ட் கார்ட் இந்த படத்தில் பின்னணி இசை இல்லை பாடல்கள் இல்லை மேலும் படத்தி வாகனத்தின் ஓசை, காற்றின் ஓசை, நீரின் ஓசை, கத்தும் சேவல் என லைவ் சவுண்ட் எபெக்ட் தான் படத்தி இசை
அதனை விட முக்கியமாக கண்ணின் கருவிழியை அசைக்காமல் கண் இமையை சிமிட்டாமல் நேரான நிலை குத்திய பார்வையில் ஒரு சித்த பிரமை பிடித்தது போல் வசனம் எதுவும் இல்லாமல் நடித்த கதையின் நாயகி என படம் முழுவதும் பல சிறப்புகள் உள்ள்ன
நடிகர்கள்:- சூரி அன்னா பென் மற்றும் பலர் இயக்குநர்:- பி.எஸ்.வினோத் ராஜ், தயாரிப்பு சிவகார்த்திகேயன்
தேனி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மீனாவுக்கு (அன்னா பென்) மேற்கொண்டு கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் மாமன் மகன் பாண்டி (சூரி). மேலும் படிக்கும் இடத்தில் மீனா காதல் வயப்படுகிறார். இந்த காதலை மீனாவுக்கு பேய் பிடித்து விட்டது என்று வீட்டில் இருப்பவர்கள் தவறாக புரிந்து கொண்டு அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள்.
அவர் எந்த நேரமும் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார். இதனால் மீனாவின் வருங்கால கணவரான பாண்டியும்(சூரி), அவரது குடும்பத்தினரும் மீனாவை ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன.அவை என்ன? உண்மையில் மீனாவாக நடித்த நாயகி அன்னா பென்னுக்கு என்னதான் பிரச்னை? மீனாவை பிடித்த ‘பேய்’ மீனாவை விட்டு போனதா ? இதற்கான விடைதான் ‘கொட்டுக்காளி’.படம்