2year old kid refuse to leave kidnaper தன்னை கடத்தியவரை பிரிய முடியாமல் கதறி அழும் குழந்தையின் பாசபோராட்டம் வைரலாகும் வீடியோ
தன்னை கடத்தியவரை பிரிய முடியாமல் கதறி அழும் குழந்தையின் பாசபோராட்டம் வைரலாகும் வீடியோ
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை காணாமல் போனதாக புகார் வந்துள்ளது.
அந்த புகாரில் தன்னுடைய 11 மாத பிருத்வி என்ற ஆண் குழந்தையை காணவில்லை என்று அந்த குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குழந்தை கடத்துபவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே பொலிஸார் குழந்தை பிருத்வியின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் கொடுப்பவருக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
பின், ஒரு தனிப்படை அமைத்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, ஆக்ரா, அலிகார் உள்பட பல இடங்களில் தேடி, 14 மாதங்களுக்கு பிறகு குழந்தை கடத்தியவரை கண்டு பிடித்தனர்.
குழந்தையை கடத்தியவரிடம் இருந்து மீட்டு தாயிடம் ஒப்படைக்கும் போது அந்த குழந்தை கடத்தியவரிடம் இருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. இந்த சம்பவம் அங்கு பெரும் ஆச்சரியத்தையும் பரிதாபத்தயும் எற்ப்படுத்தியது. இருந்தாலும் கடத்தியவரிடம் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.
பொலிஸார் கூறுகையில்,குழந்தையை கடத்தியவர் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தனுஜ் சாஹர் என்பவர், அலிகரில் உள்ள ரிசர்வ் பொலீஸில் ஏட்டாக பணியாற்றி பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர் , காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த 14 மாதத்திற்கு முன் குழந்தையை கடத்தி செல் போன் எதுவும் பயன்படுத்தாமல், அடிக்கடி இருக்கும் இடத்தையும் மாற்றி வந்துள்ளார். மேலும் தாடி வளர்த்து தன்னுடைய அடையாளத்தயும் மாற்றியுள்ளார்.
இவர் அலிகார் உள்ளதாக தனிப்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. குழந்தையுடன் தப்பியோட முயற்சித்தவரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் பிடித்தனர். பின்னர், குழந்தையை அவனிடமிருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்னர்.
வைரல் வீடியோ பார்க்கள்: