The Greatest Of All Time Review நடிகர் விஜய்யின் தி கோட் திரை விமர்சனம்
The Greatest Of All Time Review நடிகர் விஜய்யின் கோட் திரை விமர்சனம் லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் G.O.A.T. – Greatest Of All Times படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், அஜ்மல் ,பிரேம்ஜி ,வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி பிரசாந்த், உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர் , மேலும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்,
கதை:-
கதையில், Special Anti-Terrorist Squad எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள சுனில் தியாகராஜன்(பிரசாந்த்), கல்யாண் சுந்தரம்(பிரபுதேவா), அஜய்(அஜ்மல் அமீர்), அவர்களின் பாஸ் நஸீர்(ஜெயராம்) ஆகியோர் முறியடித்து வருகின்றனர்.
எம்.எஸ். காந்தி(விஜய்) தான் என்ன தொழில் செய்கிறோம் என்பதை மனைவி சினேகாவுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார் காந்தி. அவர்களுக்கு ஜீவன் என்கிற மகன் இருக்கிறார். கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மகன் ஜீவனை (இளம் விஜய்) ரஷ்யாவில் பார்க்கிறார் காந்தி. அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கிறது அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை.
The Greatest Of All Time Review
goat movie vijay வெளியானது விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் – பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க
டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
goat movie vijay