viral videosEducation

first container school in telangana தெலுங்கானாவில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான முதல் கன்டெய்னர் பள்ளி வைரல் வீடியோ

தெலுங்கானாவில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான முதல் கன்டெய்னர் பள்ளி வைரல் வீடியோ

தெலுங்கானா கன்னைகுடேம் மண்டலம் வனப் பகுதியில் அமைந்துள்ள பங்காருபள்ளி தாண்டா பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் குழந்தைகளுக்காக  மாவட்ட நிர்வாகம் “கன்டெய்னர் பள்ளி” ஒன்றைத் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.  இந்த  கன்டெய்னர் பள்ளியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தனாசாரி அனசுயா திறந்து வைத்தார்.

first container school in telangana
first container school in telangana

வனப் பகுதிகளில் நிரந்தரமான  கட்டமைப்புகள் அமைக்க வன விதிகள் அனுமதிக்காததால், பழங்குடியினக் குழந்தைகள் குடிசைகளில் படித்து வருவதாக  கூறுபடுகிறது மேலும் பழங்குடியின குழந்தைகள் படும் சிரமங்களை உணர்ந்த ஆட்சியர் டி.எஸ்.திவாகரன், கொள்கலன் பள்ளி கட்டுவதற்கு ரூ.13.50 லட்சம் ஒதுக்கீடு செய்து, குழந்தைகள் படிப்பைத் தொடர கன்டெய்னர் பள்ளி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது, மேலும் இது போல் இரண்டு அல்லது மூன்று பள்ளிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். 

மாநிலத்தில் கன்டெய்னரில் அரசுப் பள்ளி நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும் . இந்த கன்டெய்னர் பள்ளி 25 அடி அகலமும் 25 அடி நீளமும் கொண்டது. இதில் 12 இரட்டை மேசைகள் மற்றும் அதிபர் (Principal) மற்றும் ஆசிரியர்களுக்கு 3 நாற்காலிகள் இடம் உள்ளது. பல இடங்களில்  கன்டெய்னர் கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும், அரசு பள்ளியாக மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

வைரல் வீடியோ பார்க்க:

CLICK HERE

first container school in telangana

Related Articles

Back to top button