TamilNadu Newstourisum

special tourist bus ஒரே நாளில் 6 முருகன் கோவில்கள் செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து அறிமுகம்

ஒரே நாளில் 6 முருகன் கோவில்கள் செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து அறிமுகம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின்  நிர்வாக இயக்குனர் திரு பொன்முடி வெளியிட்டுள்ள செய்தியில் பக்தர்கள் ஒரே நாளில் 6 முருகன் கோவில்களில் தரிசனம் செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி வார இறுதி நாட்கள் அதாவது  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘சிறப்பு சுற்றுலா பேருந்து’ இயக்கப்பட உள்ளது.

special tourist bus
special tourist bus

இந்த சிறப்பு சுற்றுலா பேருந்து அக்டோபர் 19-ஆம் தேதி முதல் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு

*எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் (திருவாரூர் மாவட்டம்),

*சிக்கல் சிங்காரவேலர் கோவில்,

*பொரவச்சேரி கந்தசாமி கோவில்,

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் (நாகப்பட்டிணம் மாவட்டம்),

*சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில்,

*ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்)

ஆகிய ஆறு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு இந்த சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது.

பக்தர்கள் இந்த பேருந்தில் பயணம்  செய்ய ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ள பக்தர்கள் இந்த சிறப்பு பேருந்தில்  பயணிக்க  www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் .

*நேரடியாக பேருந்தில்  பயணச்சீட்டு பெற்று  பயணிக்க இயலாது என்று தெரிவிக்கபட்டுள்ளது

பயணச்சீட்டு முன்பதிவு செய்ய:

CLICK HERE

special tourist bus

 

 

Related Articles

Back to top button