kanguva review in tamil கங்குவா திரை விமர்சனம்
kanguva review in tamil கங்குவா திரை விமர்சனம்
இயக்கம்:- சிறுத்தை சிவா தயாரிப்பு:- ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இசை:- தேவி ஸ்ரீ பிரசாத்
நடிகர்கள்:- சூர்யா திஷா பதானி, பாபி தியோல் நட்டி நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி
கதை:-
படத்தின் கதை, 1070 மற்றும் 2024 என இரு காலகட்டங்களில் மாறி மாறி நடப்பது போல் காட்டுகிறார்கள்.
2020 காலகட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் (சூர்யா ) ஒரு பவுன்ட்டி ஹன்டர் பணத்திற்காகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பவர் கோவாவில் காவல்துறையால் தீர்க்க முடியாத வழக்குகளை திறம்பட செய்து முடித்து அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளும் ஆளாக இருக்கின்றார். அதே நேரத்தில் இந்திய எல்லைப்பகுதியில் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ரகசிய பரிசோதனையைச் செய்யும் ஆராய்ச்சி கூடத்திலிருந்து தப்பித்து வருகிறான் சிறுவன் ஸெட்டா (Zeta). இதனிடையே பிரான்சிஸும் ஸெட்டாவும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். தங்களுக்குள் இனம்புரியாத உறவு இருப்பதை இருவரும் உணர்கின்றனர்.
தப்பித்த சிறுவனைத் தேடி ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சி கூட கும்பல் துரத்துகிறது. அச்சிறுவனைக் கைவிட பிரான்சிஸுக்கு விருப்பமில்லை. ப்ளாஷ் பேக்கில் கதை 1070 ற்க்கு செல்கின்றது ஐந்து தீவில் ஒன்றாக இருக்கும் பெருமாச்சியைக் காத்துவரும் இளவரசனாக இருக்கிறார் கங்குவா (சூர்யா). அவர்களின் குழுவுக்கு போர்தான் குலத்தொழில். அந்த பெருமாச்சியை அடைய ஆசை கொள்கிறான் ரோமானிய அரசன். அவனுக்கு உதவி செய்து பெருமாச்சி இனத்திற்கு துரோகம் செய்கிறான் கொடுவன்.
இது பெருமாச்சி இனத்திற்கு தெரிய வர, அவனை தீ வைத்து கொளுத்துகின்றார்கள் அவனுடன் உடன் கட்டை ஏறும் அவனது மனைவி கங்குவாவிடம் தன் மகனை காப்பாற்ற கோரிக்கை வைக்கிறாள். ஒரு தாய்க்கு கொடுத்த வாக்கிற்காக தன் இனத்தையே விட்டு வெளியே செல்கின்றான் கங்குவா அந்த தீவை அடைய ரோமானியர்கள் பெரும்படையோடு வருகிறார்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சியில் பக்கத்துத் தீவில் இருக்கும் அரத்தி குல அரசன் உதிரன் (பாபி தியோல்) கங்குவாவின் பெருமாச்சி மீது படையெடுத்து வருகிறான். இந்த போரில் வெல்வது யார், இரண்டு காலகட்டத்துக்கும் என்ன சம்பந்தம் அந்த சிறுவனுக்கும் சூர்யாவிற்க்கும் என்ன உறவு? சிறுவனை எதிராளிகளிடமிருந்து சூர்யா மீட்டாரா இல்லையா? என்பதே கங்குவா.
kanguva review in tamil
Trailer Video Click Here