முருங்கை பிசினி பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
பல அபாரமான சத்துக்கள் கொண்ட முருங்கை மரத்தின் பிசின் எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
முருங்கை கீரையை விட முருங்கை மரத்தின் பிசினில் அதிக சத்துக்கள் நிறைந்து உள்ளன
முருங்கை மரத்தில் கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாகிவிட்டால், அது பசை போல மரத்திலிருந்து வெளித்தள்ளும் பொருளைதான் நாம் பிசின் என்கிறோம். இதுகழிவு போல வெளியே தள்ளிவிடுவதால், இதனை நாம் குறைத்து மதிப்பிட கூடாது இந்த பிசின் தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் கொண்டது என்று கூறபடுகிரது
முருங்கை பிசின்:
முருங்கை மரத்தின், பிசினில் இரும்புச் சத்து, வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வேதிப்பொருள்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன . மேலும் ஆல்கலாய்டுகள், பிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள், பாலிசாக்கரைடுகள் போன்ற வேதிப் பொருள்களும், அமினோ அமிலங்கள், தாது உப்புகளும், மருத்துவ நன்மைகளும் உள்ளது.
முருங்கைப் பிசினை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீர் நன்றாக வெளியேறவும், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் சிறந்த மருந்து ஆகும்
பார்ப்பதற்கு கெட்டித்தன்மையுடன் சிவப்பு இளம் சிவப்பு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும் முருங்கை மரத்தின் பிசின் நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கிறது.
முருங்கைப் பிசினை பயன்படுத்தும் முறை:
*முருங்கைப் பிசினை நன்றாக கழுவி, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் இந்த முருங்கை பிசின்ஜெல்லி பதத்துக்கு வந்துவிடும். இந்த நீரை இளஞ்சூடான பால்லி கலந்து ஆண்கள் குடிக்கலாம். இதனால், நரம்பு தளர்ச்சி நீங்குவதோடு ஆண்மை கோளாறுகள் நீங்கும்.
*கெட்டியான பிசினை உடைத்து, அதை நெய்யில் வறுத்து தூள் செய்து சாப்பிட்டு வரலாம்.
* முருங்கை பிசின் பவுடரை, இரவில் ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காலையில் பிசின் தண்ணீரை வடி கட்டி குடிக்கலாம்
*அல்லது முருங்கை பிசின் பவுடரை, ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து, பின் அதைசூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.
*முருங்கைப் பிசினை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை குளிர்பானங்கள் சேர்த்து பருகலாம்
இந்த முருங்கை பிசினை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இதில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், முழங்கால் வலி, மூட்டு வலிகள் நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு , அனீமியா பாதிப்பு உள்ளவர்கள், பிரசவத்திற்கு பின்னர், பலம் குறைந்தவர்களுக்கு இந்த முருங்கையின் பிசின் சிறந்த மருந்தாகும்.
சமீபத்தில், இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசி அண்ட் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி இணைந்து நடத்திய ஆய்வில் ,
முருங்கை பிசினை உடலின் வெளிப்புறமாக பயன்படுத்தப்படும்போது, காயம், புண், சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஏற்படும் தொற்றுக்கள்ளில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, ஆக்ஸிஜனேற்றம், திசு பாதுகாப்பு, வலி நிவாரணி உள்ளிட்ட பல உயிரியல் செயல்பாடுகளை இந்த பிசின் கொண்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
மேலும், முருங்கை பிசினில் உள்ள பலவித பாலிபினால்கள், ஃபீனாலிக் அமிலங்கள், பிளாவனாய்டுகள், குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகள். காயங்களை விரைந்து ஆற்றும் தன்மை உடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முருங்கை பிசின் கலந்த தயாரிப்புகளை உடலின் மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம் என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.
மேலும் பாதம் பிசினை விட அதிக சத்துக்கள் கோண்ட இந்த முருங்கை பிசின்நாட்டு பமருந்து கடைகளில் ஒரு கிலோ ருபாய் 500 முதல் 1000 வரை விற்க்க படுகிரது
இதுவரை அனாவசியமாக பார்க்கப்பட்ட முருங்கை பிசின் இனி பொக்கிஷமாக பார்க்கப்படும்.