CINEMA

dragon movie review tamil டிராகன் திரை விமர்சனம்

dragon movie review tamil டிராகன் திரை விமர்சனம்

நடிகர்கள்:-

பிரதீப் ரங்கநாதன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் கவுதம் வாசுதேவ்மேனன் ஜார்ஜ் மரியான் கே.எஸ்.ரவிகுமார் மிஷ்கின் வி.ஜே.சித்து, ஹர்ஷத்

இயக்கம்:- அஸ்வத் மாரிமுத்து.

dragon movie review tamil.

dragon movie review tamil
dragon movie review tamil

கதை:-

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றதால் அவரின் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக்குழுவினர் நிறைவேற்றினார்களா? இல்லையா? என்பதை காண்போம்.

பொதுவாக நன்றாக படித்து ஒழுக்கமாக இருக்கும் பசங்களை விட படிக்காம கெத்தா சுத்திட்டு இருக்கும் பசங்கள தான் பெண்களுக்கு பிடிக்கும். ஆனால் அது வாழ்க்கைக்கு உதவுமா என்ற அறிவுரை தான் ‘டிராகன்’ திரைப்படம்

படம் ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரிக்கு வரும் புதிய மாணவர்களை வரவேற்கும் கல்லூரி முதல்வர் மயில்வாகனன் (மிஷ்கின்) நீங்கள் இவனைபோல் ஆகிவிடக்கூடாது என்று முன்னாள் மாணவரான டிராகன் என்கிற ராகவனை (பிரதீப் ரங்கநாதன்) உதரணமாகக் காண்பிக்கிறார். ப்ரதீப் 12-ம் வகுப்பில் நன்றாக படித்து 96% எடுத்து மெரிட்டில் வேலூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டதாரியாக படிக்கிறார் D. ராகவன் எனும் டிராகன்( பிரதீப் ரங்கநாதன்) . பள்ளியில் நன்றாக பிடித்த தன்னை ஒரு பெண் வேண்டாம் என சொல்லியதால் கல்லூரியில் அடாவடி செய்யும் பையனாக வலம் வருகிறார். கல்லூரியில் படிப்பதை தவிர வேறு அனைத்து அட்டகாசங்களையும் செய்து மாணவர்களிடத்தில் கெத்து காட்டுகிறார்.

dragon movie review

என்ஜினீயரிங் கல்லூரியில் டான் ஆக வலம் வரும் பிரதீப் ரங்கநாதனை, எல்லோரும் டிராகன் என்று அழைக்கிறார்கள். இவரை அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவியான கீர்த்தி (அனுபவமா பரமேஸ்வரன்) காதலிக்கிறார். படிப்பின் மீது நாட்டம் இல்லாமல் சுற்றும் பிரதிப் ரங்கநாதனுக்கு 48 அரியர் விழுகிறது. கல்லூரி முதல்வரான மிஷ்கினுடன் ஏற்படும் பிரச்சனை காரணமாக பட்டப் படிப்பை நிறைவு செய்யாமல் எந்த தேர்விலும் தேர்ச்சி அடையாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் வேலைக்கு போக, இவர் ஜாலியாக காதலியுடன் ஊர் சுற்றி பொழுது கழிக்கிறார்.

நண்பர்களுடன் அவர்களுடைய அறையில் தங்கி வேலை வெட்டி எதுவும் செய்யாமல் தன் காதலியுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அத்துடன் வேலைக்கு செல்கிறேன் என்று பெற்றோரையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுப்பில்லாமல் சுற்றும் பிரதிப் ரங்கநாதனுடைய பொறுப்பின்மையை உணர்ந்து கொண்ட காதலி கீர்த்தி இவரை விட்டு பிரிந்து, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் டிராகன் ,அவளை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியை தேர்வு செய்கிறார்.

dragon movie review tamil.

போலி கல்வி சான்றிதழை தயாரித்து, அதன் மூலம் பெரிய நிறுவனத்தில் 3 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். வாழ்க்கையில் வளர்ச்சியை அடைந்து வெற்றி நோக்கி பயணிக்கத் தொடங்குகிறார். மிகப் பெரும் தொழிலதிபரான கே. எஸ். ரவிக்குமாரின் மகளை திருமணம் செய்து கொள்வதற்கான நிச்சயமும் நடைபெறுகிறது.

வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆக, ஒரு நாள் மிஷ்கின் ப்ரதீபை பார்த்து, போலி சான்றிதழ் குறித்து பேச, ப்ரதீப் காலில் விழுந்து கெஞ்சுகிறார். அப்போது மிஷ்கின் சரி 48 அரியரை இப்போது க்ளியர் செய், மீண்டும் உன் தப்பை திருத்து, நான் உன்னை விடுகிறேன் என சொல்ல பிறகு ப்ரதீப் என்ன செய்தார் அவருடைய வாழ்க்கையில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டாரா? இல்லையா? என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.

dragon movie review tamil

டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:

Related Articles

Back to top button