viral videos

woman thrown from a rollercoaster ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண் பதற வைக்கும் வீடியோ 

ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த 22 வயது பெண் பதற வைக்கும் வீடியோ 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேவிஎஸ் தனியார் பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் நேற்று இரவு கவுசல்யா(22) என்ற இளம்பெண் ராட்டினத்தில் ஏறினார். ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் இயக்குபவர்கள் தெரிவித்து உள்ளனர்.

woman thrown from a rollercoaster
woman thrown from a rollercoaster

ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரன், ஆபரேட்டர் முகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருட்காட்சியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவரின் செல்போனில் பதிவான விபத்து குறித்து எடுக்கபப்ட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

வீடியோ பார்க்க:

CLICK HERE

woman thrown from a rollercoaster

 

Related Articles

Back to top button