gold facial at home வீட்டிலேயே ஈசியாக கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி
gold facial in 6 steps
நமது முக அழகயும் சருமத்தயும் பாதுகாக்க மாதம் ஒரு முறையாவது பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது’பொதுவாக ஃபேஷியல் செய்து கொள்வதால் முகத்தில் ,உள்ள சுருக்கங்கள் , மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை நீக்கி சருமம் பளபளப்பாக தோன்றும்
ஃபேஷியலில் பல வகை உண்டு அதிலும் கோல்ட் ஃபேஷியல் எந்த மாதிரியா சருமத்ர்க்கும் எற்றதாக இருக்கும் ஆனால் இது போன்ற ஃபேஷியல் செய்ய பியூட்டி பார்லர்கலில் அதிக பணம் செலவழிக்க வேண்டிய இருக்கும்
ஆனால் வீட்டிலிருந்தே இந்த் விலையுயர்ந்த கோல்ட் ஃபேஷியலை நம் சமையலறையில் பயன் படுத்தபடும் இயற்கையான பொருட்களை கொண்டே செய்யலாம்.
வீட்டிலேயே சுலபமாக ஃபேஷியல் செய்து கொள்ளும் முறை:
-முகத்தை சுத்தப்படுத்துதல்
-ஸ்டீமிங்
-ஸ்க்ரப்பிங்
-ஃபேஸ் மசாஜ்
-ஃபேஸ் மாஸ்க்
-மாய்ஸ்சரைசர்
–step 1
முகத்தை சுத்தப்படுத்துதல் (cleansing):
கோல்ட் ஃபேஷியல் cleansing என படும் முகத்தை சுத்தம் செய்வதில் தொடங்குகிறது. இதற்கு முதலில் ஒரு சிண்ன கிண்ணத்தில் 10ml காய்ச்சாத பச்சைப் பாலை எடுத்து அதில் ஒரு சுத்தமான பருத்தியை நனைக்கவும்.
பாலில் நனைத்த பருத்தியை முகம் மற்றும் கழுத்து முழுவதிலும் நன்றாக தடவி 1-3 நிமிடம் வரை (circular motion) வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பிறகு, ஈரமான முகத்தைத் நன்றாக துடைக்கவும்.
step 2
ஸ்டீமிங் (streaming):
ஃபேஷியலின் அடுத்த செய்யவேண்டியது முகத்தை ஸ்டீமிங் செய்வது.
ஒரு அகலமான பத்திரத்தி 1லிட் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதித்தப்பின் அதை இரக்கி வைத்து பின் ஷவர் கேப் அள்ளது ஒரு டவல் மூலம் தலைமுடியை மூடி,
பின் முகத்திற்கு 2-3 நிமிடம் (ஆவி காட்டுவது) ஸ்டீமிங் கொடுப்பதன் மூலம், முகத்தில் உள்ள துளைகள் திறக்கப்படு அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்க உதவும்’ பிறகு முகம் மற்றும் கழுத்தை ஒரு துணியால் துடைக்கவும்.
step 3
ஸ்க்ரப்பிங் (scrubbing)
ஸ்டீமிங் செய்த பிறகு, முகம் ஸ்க்ரப்பிங் செய்யவேண்டும். இதற்கு ஒரு கிண்ணத்தில்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு,
1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
மற்றும் அரை டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த ஸ்க்ரப் கலவையை முகம் மற்றும் கழுத்தில் 2 நிமிடங்களுக்கு மெதுவாக தேய்க்கவும். பிறகு, முகத்தை நீரில் கழுவி ஒரு துணியால் துடைக்கவும்.
step 4
ஃபேஸ் மசாஜ் (face massage):
ஃபேஸ் மசாஜ் க்ரீம் தயாரிக்க,
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்,
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்து
ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கி 10 நிமிடம் இந்த கிரீமை முகம் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்த பிறகு, மென்மையான துணியால் முகத்தை நன்ராக துடைக்கவும்.
step 5
ஃபேஸ் மாஸ்க் (face mask):
முகத்தில் போடப்படும் ஃபேஸ் மாஸ்க் மிகவும் முக்கியமானது இது முகத்தில் திறந்த துளைகளை மூட உதவும்.
ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய,
ஒரு கிண்ணத்தில் 1/4 டீஸ்பூன் மஞ்சள்,
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு,
2 டேபிள் ஸ்பூன் பால்,
1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்
மற்றும் 1 டீஸ்பூன் தேன்
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கல்க்கிய பேஸ்ட்டை கண்களில் படாமல் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10 -15 நிமிடங்கள் விடவும். பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவவும்.
step 6
மாய்ஸ்சரைசர் (moisturiser)
இந்த கோல்ட் ஃபேஷியலின் கடைசியாக மாய்ஸ்சரைசர் முக கிரீம் தடவுவது முக்கியம். வீட்டில் உள்ள நல்ல மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு ஒரு காட்டன் துணியால் முகத்தை துடைக்கவும்.
குறிப்பு:
சென்சிட்டிவ் மற்றும் அலர்ஜி ஸ்கின் உள்ளவர்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது
பொறுப்பு துறப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது
gold facial at home
வீட்டிலேயே ஈசியாக கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி