actor prashanth was fined நடிகர் பிரசாந்துக்கு ரூ2000 அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை

நடிகர் பிரசாந்துக்கு ரூ2000 அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை
நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷனில் பிஸியாகி உள்ள நடிகர் பிரசாந்த் ஒரு யூடியூப் சேனலுக்கு பைக் ஓட்டிக் கொண்டே பேட்டி அளித்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியானது.

வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ட்விட்டரில் ஒருவர் அந்த வீடியோவை சென்னை மாநகர காவல்துறைக்கு டேக் செய்து அனுப்பி, “டூவீலர் விதிகள் சாமானியருக்கு மட்டுமா .. ஒரு பிரபல நடிகராக பிரசாந்த் இது போல் விதிமுறைகள் மீறும்போது நடவடிக்கைகள் இருக்காதா,இல்லை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று த்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாமே” எனக் கூறியிருநந்தார்.
ஹெல்மெட் அணியாமல் நடிகர் பிரசாந்த் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் யூடியூப் சேனல் தொகுப்பாளினி ஆகியோருக்கு ரூ.2,000 அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை. உடனே அதனை ட்விட்டரிலும் குறிப்பிட்டுள்ளது ,இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரல் ஆனது
actor prashanth was fined