CINEMA

amy jackson love சுவிட்சர்லாந்தில் காதலை வெளிப்படுத்திய பிரபல நடிகர் ஒக்கே சொன்ன எமி ஜாக்சன் வைரல் புகைப்படங்கள்

amy jackson love  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அதன் பிறகு தாண்டவம், தங்க மகன், ஐ, ,தெறி,எந்திரன், மிஷின் சாப்டர் ஒன், என பல படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை எமி ஜாக்சன் திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது கிராக் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகின்றார் எமி ஜாக்சன்.

amy jackson love
amy jackson love

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள பனி படர்ந்த பாலம் ஒன்றில் தனது காதலர் காதலை வெளிப்படுத்தியதாகவும் அதை தானும் ஏற்றுக் கொண்டதாகவும் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எமி ஜாக்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பணி சூழ்ந்த இடத்தில், தொங்கும் பாலத்தில் தனது காதலர் தனக்கு ப்ரப்போஸ் செய்ய, அதற்கு ஆச்சரியப்பட்டு தலையசைத்திருக்கிறார் எமி. எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் எட் வெஸ்ட் விக், உலகம் முழுவதும் பிரபலமான காசிப் கேர்ள் என்ற தொடரில் சக் பேஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்

amy jackson love

More Details

Related Articles

Back to top button