andhagan review tamil நடிகர் பிரசாந்த்தின் அந்தகன் திரை விமர்சனம்
andhagan review tamil நடிகர் பிரசாந்த்தின் அந்தகன் திரை விமர்சனம்
நடிகர்கள்:-
பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி கார்த்திக் கேஎஸ் ரவிக்குமார் யோகிபாபு, ஊர்வசி வனிதா விஜய்குமார் மற்றும் பலர் இயக்கம் :- தியாகராஜன் இசை:- சந்தோஷ் நாராயணன்

கதை:-
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்து 2018ல் ஹிந்தியில் வெளிவந்த படம் அந்தாதுன் படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் இயக்கியுள்ளார் தியாகராஜன்.
பிரஷாந்த் ஒரு பியோனோ ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார் இசையில் முழு கவனத்தை செலுத்தவும், பிறரின் அனுதாபம் பெறவும் பார்வையற்றவர் போல் நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் நட்பு கிடைக்க அவருடன் நெருங்கி பழக ப்ரியா ஆனந்த் பாரிலேயே ஒரு வேலை பிரஷாந்த்துக்கு கிடைக்க, இதில் வரும் வருமானம் வைத்து லண்டன் போக முயற்சி செய்து வருகிறார்.

அந்த நேரத்தில் நடிகர் கார்த்திக் அறிமுகம் பிரஷாந்துக்கு கிடைக்கிறது. கார்த்திக் அவருடைய மனைவியை(சிம்ரன்) திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய, பிராசந்தை வீட்டிற்கு அழைக்கிறார். மறுநாள் கார்த்திக் வீட்டிற்குச் செல்கிறார் பிரசாந்த். அவரை வரவேற்கும் கார்த்திக்கின் மனைவி சிம்ரன், கார்த்திக் ஊரில் இல்லை என்று சொல்கிறார்.
இருந்தாலும் வீட்டிற்குள் செல்லும் பிரசாந்த் அங்கு கார்த்திக் கொலை செய்யப்பட்டிருப்பதையும், உள்ளே சமுத்திரக்கனி இருப்பதையும் பார்க்கிறார். பிரசாந்திற்குப் பார்வை தெரியாது என நினைக்கும் சிம்ரன், சமுத்திரக்கனி ஆகியோர் கார்த்திக்கின் உடலை அப்புறப்படுத்துகிறார்கள். அடுத்தடுத்து சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன.இதன் பிறகு நடக்கும் பதட்டமும், சுவாரஸ்யமும் தான் மீதிக்கதை. சிம்ரன் நீண்ட நாள் கழித்து ஒரு வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்

andhagan review tamil