Annapoorani Movie Review அன்னபூரணி திரை விமர்சனம்
Annapoorani Movie Review tamil நடிகை நயந்தாராவின் அன்னபூரணி திரை விமர்சனம்
Annapoorani Movie Review
நடிகர்கள்:-
நயன்தாரா, ஜெய், சத்யராஜ் கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சஞ்சு என பலர் நடித்துள்ளனர்
இயக்குநர்:- நிலேஷ் கிருஷ்ணா

கதை:-
திருச்சியைச் சேர்ந்த பிராமணக் குடும்ப பெண்ணான அன்னபூரணிக்கு (நடிகை நயன்தாரா) இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வேண்டும் எனும் லட்சியம், இந்தியாவின் பிரபலமான சமையல் கலைஞரான ஆனந்த் சுந்தர்ராஜன்(சத்யராஜ்) தான் அன்னபூரணிக்கு ரோல் மாடல் ஆனால் தந்தை ரங்கராஜன் (அச்யுத் குமார்) பி.இ. படித்தும் ரயில்வே வேலை வேண்டாம் கடவுளுக்கு சேவை செய்ய ரங்கநாதர் கோவிலில் பிரசாதம் செய்யும் சமையல் கலைஞராக இருக்கிறார்.
கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் தனது தந்தைக்கு அசைவம் பிடிக்காது மேலும் மகளின் ஆசை தெரிந்து ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த நாம் மாமிசத்தை தொடுவது பாவம் என கண்டிக்கின்றார் அப்பா. இருந்தும் அன்னபூரணிக்கு சமையல் கலைஞராகும் ஆசை விடவில்லை. எம்.பி.ஏ. படிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு தந்தைக்கு தெரியாமல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறார்

அன்னபூரணி. கேட்டரிங் படிக்கும் போது அசைவ உணவுகளை சமைக்க அன்னப்பூரணியால் முடியவில்லை அப்போது அவருக்கு ஜெய் நம்பிக்கை கொடுக்கிறார். பிறகு அன்னப்பூரணி அசைவ உணவுகளை சமைக்க ஆரம்பிக்கிறார். அன்னப்பூரணி கேட்டரிங் படிப்பதை தெரிந்துகொண்ட அவரின் பெற்றோர், படிப்பை பாதியில் நிறுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர்,
அப்போது ஜெய் உதவியுடன் அங்கிருந்து கிளம்பி பிரபல ஹோட்டலில் ஷெப்பாக வேலைக்கு சேர்கின்றார் இதற்க்கிடையில் சத்யராஜ் நடத்தும் ஒரு பெரிய சமையல் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கும் போது ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் அன்னப்பூரணி தன் சுவை திறனை இழக்கிறார், இனிமேல் தன்னால் சரியாக சமைக்க முடியாது என மனமுடைந்து போய் விடுகிறார். இதற்கடுத்து அன்னப்பூரணி தன்னுடைய இந்த பிரச்னையை எதிர்கொண்டு IBC போட்டியில் கலந்துகொண்டு வென்றாரா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எப்படி சமாளித்தார் என்பதே அன்னபூரணி திரைப்படத்தின் கதை.
Annapoorani Movie Review

அன்னபூரனி டிரைலர் பார்க்க:-