Ayalaan Trailer சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர் இரவு 8.07 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
அயலான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படும்

Ayalaan Trailer ரவிக்குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைpபில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இஷா கோபிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்
இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 8.07 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படத்தின் டிரெய்லர் இன்று மாலை துபாயில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக படக்குழு துபாய் சென்றுள்ளது.மேலும் டிரெய்லர் துபாயின் பிரபல கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்பட உள்ளது.
