bhavatharini died பவதாரிணி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி முழு விவரம்
bhavatharini died bhavatharini died பவதாரிணி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி முழு விவரம்
இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார்.

பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.
பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.பவதாரிணியின் உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.