CINEMA

bigg boss promo பிக்பாஸ் வீட்டில் 2 வது வீடு எதற்க்கு தெரியுமா

bigg boss 7 promo today முதல் நாளே 6 போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ் யார் யார் தெரியுமா

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ம் வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்படுகின்றது அதில் இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி , அசிம் என பட்டம் வென்றுள்ளார்கள் இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

தினசரி எபிசோடுகள் இரவு 9.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். மேலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொள்ளலாம். இந்த ஆண்டு, பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள்

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி சந்திரா,விஜய் வர்மா, நடிகை வினுஷா தேவி,நடிகை விசித்ரா,பூர்ணிமா ரவி , ராப்பர் நிக்சன்,எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், ஜோவிகா, நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ் உள்ளிட்ட 18 பேர் கலந்துகொண்டுள்ளார்கள்.

பிக்பாஸ் வீட்டில் 2 வது வீடு எதற்க்கு தெரியுமா

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார தலைவர் போட்டியில் விஜய் வர்மா வெற்றி பெற்றுள்ளார் இவரை குறைவாக கவர்ந்த, போட்டியாளர்கள் 6 பேரை பிக்பாஸ் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.அதன்படி ஐஷு, நிக்சின், பாவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகியோர் இரண்டாவது வீட்டுக்கு செல்லலாம் என பிக்பாஸ் கூறுகிறார்.

மேலும் இனி முதல் வீட்டுக்கு வரும் போது தான் நான் உங்களிடம் பேசுவேன் என கூறுவதோடு, அதே போல் இரண்டாவது வீட்டில் இருக்கும் 6 பேரும் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது, தண்டனை கொடுப்பதற்கான இடம் என்பது தெரியவந்துள்ளது

இன்றைய ப்ரோமோ பார்க்க:-

Related Articles

Back to top button