CINEMA

bigg boss 7 tamil contestants பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் யார் யார் முழு விவரம் இதோ

bigg boss 7 tamil பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் பற்றிய முழு தகவல்கள் தெரிந்து கொள்ள

bigg boss 7 tamil contestants பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் யார் யார் முழு விவரம் இதோ

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் யார் யார் முழு விவரம் இதோ

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ம் வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்படுகின்றது அதில் இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி , அசிம் என பட்டம் வென்றுள்ளார்கள் இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள்,

பிக்பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தினசரி எபிசோடுகள் இரவு 9.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். மேலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு, பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள்

  1. கூல் சுரேஷ்
  2.  பூர்ணிமா ரவி
  3. ரவீனா தாஹா
  4. பிரதீப் ஆண்டனி
  5. நிக்சன்
  6. வினிஷா தேவி
  7. விஜய் வர்மா

  8. மணி சந்திரா

  9. சரவண விக்ரம்

  10. யுகேந்திரன்

  11. பாவா செல்லத் துரை

  12. ஐஷு

  13. விசித்ரா

  14. ஜோவிகா

  15. அக்ஷயா

  16. உதயகுமார்

  17. மாயா கிருஷ்ணன்

  18. அனன்யா ராவ்

முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் உள்ளே வந்துள்ளார்

cool suresh

முதல் நாளே பிக் பாஸ் அனைவருக்கும் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷிற்கு கேப்டன் பதவி உங்களுக்கு தான் என கொடுத்தார்

அடுத்ததாக வீட்டிற்குள் வரும் பிரபலத்துடன் வாக்குவாதம் செய்து அந்த கேப்டனாக கேப்டனாக இருக்கலாம் என பிக் பாஸ் கூறியிருந்தார். இப்படி அனைத்து போட்டியாளர்களும் வாக்குவாதம் செய்து கேப்டனாக தொடரலாம்

1.கூல் சுரேஷ்

கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த சீசனில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர் இவர்தான்.

கூல் சுரேஷ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதால், அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுரேஷ் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் திரைப்படம் மூலம் அறிமுகமானார். பல படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார்

2.பூர்ணிமா ரவி யூடியூபர்

பிரபலமான யூடியூப்பரான பூர்ணிமா ரவியும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக களம் கண்டுள்ளார். அவருக்கு கமல்ஹாசன் விசிலை பரிசாக கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

பூர்ணிமா ரவி அராத்தி என்ற யூட்யூப் சேனலை தொடங்கினார். அதில் தனது நடன வீடியோக்கள் க்ரியேட்டிவான வீடியோக்களை பதிவேற்றினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைத்தது அதன் பின்பு குறும்படம், மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.

  1. ரவீனா தாஹா

சென்னையில் பிறந்த இவர் ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

மேலும் பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்

அதே போல் ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் அதேபோல் டிடிஎஃப் வாசன் உடன் பைக்கில் அமர்ந்து கொண்டு சில வீடியோக்களும் வெளியிட்டு இருந்தார் .இவருக்கு பட்டர்பிளை ரிங் ஒன்றை கமல் பரிசாக கொடுத்து அனுப்பினார்.

  1. பிரதீப் ஆண்டனி

சென்னை சொந்த ஊராக கொண்ட பிரதீப் ஆண்டனி  அருவி படத்தின் மூலம் பிரபலமானார் அதன்பின்பு வாழ், கவின் நடித்த டாடா திரைப்படத்திலும் நடித்திருந்தார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான கவினின் நெருங்கிய தோழனும் ஆவார். பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக்கை பரிசாக கொடுத்தார் கமல்ஹாசன்.

  1. நிக்ஸன்:-

எங்கள் வீட்டில் நானும் என் தந்தையும் தான். அவருக்கு நான் சினிமாவில் இருப்பது பிடிக்கவில்லை. சிஏவாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். நன்றாக யோசித்த பிறகு சினிமா தான் முக்கியம் என தேர்வு செய்து விட்டேன். எடிட்டிங், பாடல் எழுதுவது பாடுவது என அனைத்து வேலைகளும் எனக்கு தெரியும்.விஜய் ஆண்டனி போலீஸ் வேடத்தில் நடித்த படத்தில் நடித்திருக்கிறேன்.

ஒத்த தாமரை என சமீபத்தில் வெளியான பாடலை நான்தான் எழுதினேன். நான் லிரிரிஸ்ட் மற்றும் ஒரு ரேப்பர் பாடகர். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால் வேலை செய்ய பிடிக்கும்.நான் குடும்ப சூழ்நிலையில் வாழவில்லை. மற்றபடி பார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் தயார் செய்து கொண்டு செல்லவில்லை. பிளஸ் நெகடிவ் அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் இருந்தபோது கூட நிறைய பேர் வாழ்த்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பாக தான் பிக் பாஸ் பார்க்கிறேன்” என்றார்.

  1. வினிஷா தேவி

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான வினுஷா தேவி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார். அவருக்கு கருப்பு வைரத்தை கமல் பரிசாக கொடுத்தார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டது,இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை வினுஷா தேவி.

இந்த சீரியலின், முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது, சீசனில் நடிகர் சிபு சூரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவர் சுந்தரி சீரியல் கேப்ரியெல்லா போன்றோருடன் இணைந்து பல வெப் தொடர்களில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் இவருடன் இணைந்து நடிகை ரேஷ்மா, அக்ஷய் கமல் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

வினுஷா தேவி மேடையில் கமல்ஹாசன் முன்பு தன்னுடைய நிறத்தை குறித்து தான் பட்ட அவமானங்கள் குறித்தும், தற்போது தான் தன்னுடைய நிறத்தினாலே தனக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பது குறித்தும் பேசினார். தன்னை போலவே பலர் நிறத்தை குறித்து வருத்தப்படுவதை இனி தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

  1. மணி சந்திரா:-

 தற்போது பல தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் மணிச்சந்திரா, பிக்பாஸ் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளார். அவருக்கு குருநாதா எனும் வாசகம் அடங்கிய டீசர்ட்டை கமல் பரிசாக கொடுத்தார்.

அக்ஷயா உதயகுமார்

லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்து பிரபலமான அக்‌ஷயா உதயகுமார்

ஜோவிகா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மகளுமான ஜோவிகா, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். ஜோவிகாவுக்கு அவருடைய தாய் வனிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

ஐஷூமுன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கையும், நடனக் கலைஞருமான ஐஷூ, பிக்பாஸ் சீசன் 7-ல் களம் கண்டுள்ளார். திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அதற்கான களமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

விஷ்ணுவிஜய்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான விஷ்ணு, அந்த சீரியல் மூலம் பெரிய அடையாளத்தை பெற்றார்.

நடிகர் விமல் மற்றும் அஞ்சலி நடித்த மாப்ள சிங்கம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலில் நடித்து வருகின்றார்

மாயா எஸ்.கிருஷ்ணா

மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O உட்பட பல படங்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணனுக்கு, கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிறகு தான் பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரம் படத்தின் ஒரு பிஜிஎம் மூலம் ஹிட்டடித்த இவர் தற்போது விஜயின் ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

சரவண விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்த சரவண விக்ரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் கண்டுள்ளார். பிக் பாஸ் மேடையில் சரவணனனுக்காக குமரன் மற்றும் தீபிகா கலந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் கடலைமிட்டாயை பரிசாக கொண்டு வந்திருந்தனர்.

யுகேந்திரன் வாசுதேவன்

பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியுள்ளார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், விஜய் நடித்த யூத் படத்திலும் நடித்துள்ளார்.

விசித்ரா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறி அசத்திய விசித்ராவும் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

பவா செல்லத்துரை

தமிழ் சிறுகதை எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளார், பேச்சாளார், மற்றும் பதிப்பாசிரியர் என்று பன்முகத்திறமை கொண்டவரான பவா செல்லத்துரை போட்டியாளராக உள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு இலக்கியவாதி செல்வது இதுவே முதன்முறை.

விஜய் வர்மா

 திருச்சியை சேர்ந்தவர் விஜய் வர்மா இவர்  ஒரு டான்சர் பின்னால் ஆடும் நடனக்குழுவில் ஒருவராக உள்ளார். 2008 ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிபோட்டி வரை வந்தார்.

மேலும் ஜோடி நம்பர் ஒன், டான்ஸ் இந்தியா டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். பிரபுதேவா, அல்லு அர்ஜூன், ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்

குறிப்பாக தலைவா திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து ஆடினார். அந்தப்படத்தில் சில காட்சிகளிலும் தோன்றி இருப்பார்.

Related Articles

Back to top button