CINEMA

bigg boss 7 tamil elimination பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்

பிக் பாஸ் இந்த வாரம் டபுள் எவிக்சனா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

bigg boss 7 tamil elimination
bigg boss 7 tamil elimination

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இவர்களில் யார் குறைவான வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதல் வாரத்தில் குறைந்த வாக்குக்கள் பெற்று, அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அவரை போட்டியில் பங்கேற்குமாறு பிக்பாஸ் வலியுறுத்தியும் பவா செல்லதுரை வெளியேறினார்

பிக்பாஸ் வீட்டில் இதுவரை அனன்யா , பவா செல்லதுரை , விஜய் வர்மா ஆகியோர் இதுவரை வெளியேறியுள்ளார்கள் 

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை ஓபன் நாமினேஷன் நடந்தது. அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வினுஷா குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த வாரம் டபுள் எவிக்சன் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் வினுஷா மற்றும், பாடகரும் – நடிகருமான யுகேந்திரன் ஆகியோரை வெளியேறியுள்ளார்கள் என செய்திகள் வலம் வருகிறது.

இந்த வாரம் இறுதியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதாக கமலஹாசன் கூறியிருக்கிறார். ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் பின்னணி பாடகர் கானா பாலா, அன்ன பாரதி, திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா ஆகியோர் வர இருப்பதாக கூறப்படுகிறது

Related Articles

Back to top button