CINEMA

bigg boss 7 tamil elimination பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர் யார் முழுவிவரம்

Bigg Boss Tamil 7 Vijay Varma Eliminated பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் வெளியேறியது இவரா

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது

bigg boss 7 tamil elimination
bigg boss 7 tamil elimination

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசனில் நடிகை வினுஷா தேவி, நடிகை விசித்ரா,ஜோவிகா, நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ்மணி சந்திரா, விஜய் வர்மா, பூர்ணிமா ரவி , நிக்சன், நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை, ரவீனா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இவர்களில் யார் குறைவான வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதல் வாரத்தில் குறைந்த வாக்குக்கள் பெற்று, அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்

அதற்க்கு அடுத்து மறுநாள் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லை , மேலும் மனதும் சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அவரை போட்டியில் பங்கேற்குமாறு பிக்பாஸ் வலியுறுத்தியும் பவா செல்லதுரை வெளியேறினார்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் மாயா, நிக்சன், மணிசந்திரா, விசித்ரா, பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, வினுஷா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் லிஸ்டில் இருந்தனர். இதில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா வாக்குகள் அடிப்படையில் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது

அதே சமயம் இந்த வாரம் ஆக்சிஜன் டாஸ்கில் பிரதீப் ஆண்டனிக்கு ஸ்மாக் போட்டு தாக்கிய விஜய் வர்மாவுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் விஜய் வர்மாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்

இந்நிலையில்  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா வெளியேறி இருப்பதாக தகவல்கள் தற்போது லீக் ஆகியுள்ளன

இந்த பரப்பான சூழ்நிலையில் யார் வெளியேறினார்கள் என இன்றைய பிக் பாஸ் ஷோ பார்த்தால் தான் தெரியவரும்

மேலும் இந்த சீசன் டைட்டில் வின்னர் பிரதீப் ஆண்டனி தான் என்றும் இப்பவே ஆர்மி ஆரம்பித்துள்ளனர்

Related Articles

Back to top button