bigg boss eviction this week பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறபோவது யார்
bigg boss eviction பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறபோவது இவர் தான்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ( Bigg Boss Season 7) வது சீசன் தற்போது நடந்துவருகின்றது மற்ற சீசன்களை போலவே இந்த சீசனும் காரசாரமான சண்டைகளுடன் நடந்து வருகின்றது,இந்த சீசனில் பிரதீப் ஆண்டனி பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது
2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, சில வாரங்களுக்கு முன்னர் 7வது சீசனில் அடியெடுத்து வைத்தது. 19 பேருடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதல் வாரமே எவிக்ஷன் தொடங்கியது. அதன்படி முதல்வாரம் அனன்யா ராவ் வெளியேறினார், அதன்பின்பு அடுத்த நாளே, பவா செல்லதுரை வெளியேறினார். இதையடுத்து, விஜய் வர்மா வெளியேறினார். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதில் யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த வாரமே வைல்ட் கார்ட் மூலம் தினேஷ், அர்சனா,கானாபாலா,ப்ராவோ,அன்னபாரதி ஆகிய 5 போட்டியாளர்கள் போட்டிக்குள் நுழைந்தனர்.

இந்த வார எவிக்சன் பட்டியலில் தினேஷ், அர்சனா,கானாபாலா,ப்ராவோ,அன்னபாரதி , ஐஷூ, அக்ஷயா, மணி ,மாயா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
இந்த வார இறுதியில் இவர்களில் ஒருவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்படுவார். பிக்பாஸ் வைல்டு கார்ட் கண்டஸ்டன்டாக உள்நுழைந்திருக்கும் தினேஷ் இந்த வாரம் வெளியேறுவார் என பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் யூகித்தனர். ஆனால், அவருக்கு பொது கருத்து கணிப்பிலேயே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. நாமினேஷனில் உள்ள பிற போட்டியாளர்களான அன்ன பாரதி, கானா பாலா, ஆர்.ஜே பிராவோ ஆகியோரும் வெளியேற வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.
அந்த வகையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் குறைவான வாக்குகளை பெற்ற இடங்களில் இருப்பது , ஐஷு , கானாபாலா மற்றும் அன்னபாரதி ஆகியோர் உள்ளார்கள் என தகவலகள் வெளியாகி உள்ளது
அன்னபாரதி தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது