CINEMA

bigg boss eviction this week பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறபோவது யார்

bigg boss 7 eviction பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறபோவது இவர் தான்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ( Bigg Boss Season 7) வது சீசன் தற்போது நடந்துவருகின்றது மற்ற சீசன்களை போலவே இந்த சீசனும் காரசாரமான சண்டைகளுடன் நடந்து வருகின்றது,இந்த சீசனில் பிரதீப் ஆண்டனி பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெட் கார்ட் கொடுத்து வெளியனுப்பபட்டார்

2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, சில வாரங்களுக்கு முன்னர் 7வது சீசனில் அடியெடுத்து வைத்தது. 19 பேருடன் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதல் வாரமே எவிக்ஷன் தொடங்கியது. அதன்படி முதல்வாரம் அனன்யா ராவ் வெளியேறினார், அதன்பின்பு அடுத்த நாளே, பவா செல்லதுரை வெளியேறினார். இதையடுத்து, விஜய் வர்மா வெளியேறினார். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதில் யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த வாரமே வைல்ட் கார்ட் மூலம் தினேஷ், அர்சனா,கானாபாலா,ப்ராவோ,அன்னபாரதி ஆகிய 5 போட்டியாளர்கள் போட்டிக்குள் நுழைந்தனர்.,இந்த நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காமல் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார், மேலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அன்னபாரதி வெளியேற்றப்பட்டார்

bigg boss eviction this week
bigg boss eviction this week

இந்த வார எவிக்சன் பட்டியலில் ,விசித்ரா, தினேஷ், அர்சனா,மணி , ஐஷூ, பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இந்த வார இறுதியில் இவர்களில் ஒருவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்படுவார். நாமினேஷனில் உள்ள  போட்டியாளர் பூர்ணிமா அல்லது ஜஸ்வர்யா இந்த வாரம் வெளியேற வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

bigg boss eviction

நாமினேஷன் லிஸ்டில் குறைவான வாக்குகளை பெற்ற இடங்களில் ஜஸ்வர்யாவும் பூர்னிமா தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள் இவர்கள் இருவரில் ஒருவர் யார் இந்த வாரம் வெளியேறப்போவது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button