CINEMA

bigg boss tamil red card பிக்பாஸில் இருந்து ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அதிர்ச்சி

bigg boss tamil 7 ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் பிரதீப் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி உள்ளார் கமல். பிக் பாஸ் வரலாற்றில் இரண்டாவது ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்படும் நபராக பிரதீப் உள்ளார். ஏற்கனவே மகத் இவ்வாறு அனுப்பப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சண்டையாகி உச்சகட்டத்தை எட்டியது. சில்லறை பையன், துரோகம் பண்ணிட்ட, செருப்பால அடிப்பேன், அசிங்கப்பட்டு போயிருவ, அம்மா மேல பொய் சத்தியம் பண்ற நீ எல்லாம் எப்படிப்பட்ட ஆளு என கூல் சுரேஷை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி பிக்பாஸ் வீட்டையே கலவரமாக்கினார்.

bigg boss tamil red card
bigg boss tamil red card

பிக்பாஸ் இருவரையும் கன்பெஷன் ரூமுக்குள் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இன்று வெளியான ப்ரோமோவில் பூர்ணிமா நைட் நிம்மதியா தூங்க கூட முடியவில்லை , பயமாக இருக்கிறது என பிரதீப்பை பற்றி குறை கூறினார். மேலும் மற்ற போட்டியாளர்களும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை பிரதீப் மீது அடுக்கினார்கள்.அதனால் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்த வார எலிமினேஷனில் அன்னபாரதி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.கடந்த வாரம்தான் வைல்டு கார்ட் எண்டிரியாக நுழைந்த அன்னபாரதி குறைவான ஓட்டுக்களை பெற்று அவர் வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் வலுவான போட்டியாளராகப் பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி வெளியேறியிருப்பது பிக் பாஸ் ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது.

Related Articles

Back to top button