bigg boss vikraman பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு
vikraman radhakrishnan பெண்ணை ஏமாற்றியதாக பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளில் வழக்கு
பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
விசிக கட்சி நிர்வாகியாக உள்ள விக்ரமன் கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் பைனல் வரை முன்னேறிய விக்ரமனுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் விக்ரமன் மீது கடந்த ஜூலை மாதம் வழக்கறிஞராக பணியாற்றி லண்டனில் ஆய்வுபட்டம் பெற்றுள்ள கிருபா முனுசாமி என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்து இருந்தார்அதில் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை என்றும்
தன்னை காதலிப்பதாக சொன்ன விக்ரமனிடம் சட்டரீதியாக திருமணமும் செய்துக் கொள்ளும்படி கூறினேன் என்றும் ஆனால் விக்ரமன் மறுத்துவிட்டார் எனவும்தன்னை காதலிப்பதாக சொல்லியே 13.7 லட்சம் ரூபாய் பணத்தை விக்ரமன் வாங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் புகார் அளித்திருந்தார்
அதேசமயம் கிருபாவின் இந்த புகாரை விக்ரமன் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் எனக் கூறி இருந்தார்.இதையடுத்து தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்கும் படி வழக்கு தாக்கல் செய்திருந்தார்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விக்ரமன் மீது சென்னை வடபழனியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் வன்கொடுமை, மோசடி உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.