Bloody Beggar Review கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் விமர்சனம்
Bloody Beggar Review நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.ஜென் மார்டின் இசையமைத்துள்ள, இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை:-
பிச்சைக்காரராக வாழ்ந்து வரும் கவினுக்கு நாம் மாளிகையில் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த நேரத்தில் நடிகர் ஒருவரின் பங்களாவில் அன்னதானம் செய்கிறார்கள் அதில் பங்கேற்கும் கவினுக்கு அந்த பங்களா வாழ்க்கைப் பிடித்துப் போகிறது. அந்த பங்களா உறவுகளிடையே சொத்துப் பிரச்னையில் 5 வாரிசுகள், தனித்தனியே சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள்.
உயில் மூலம் பெரும் பங்குகளை பெற்ற மகன் காணாமல் போன நிலையில் அந்த மகனாக நடிக்க கவினை அழைக்கின்றனர் ஒரு பிரிவினர். ஆனால் அவர் தான் உண்மையான மகன் என தெரியாமலேயே நடிக்க ஒத்துக்கொள்கின்றார் ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு உண்மை தெரியவர அனைவரும் சேர்ந்து கவினை தீர்த்துக்கட்டி சொத்தை தங்கள் வசமாக்க முடிவு செய்கிறார்கள். அந்த பணக்காரக் குடும்பத்தின் சதித்திட்டத்திலிருந்து, தப்பித்தாரா? என்பதுதான் முழுக்கதை