captain vijayakanth passed away தேமுதிக கட்சி நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் காலமானார்
Actor and DMDK founder ‘Captain’ Vijayakanth passes away
captain vijayakanth passed away தேமுதிக கட்சி நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் காலமானார்
Actor and DMDK founder ‘Captain’ Vijayakanth passes away
captain vijayakanth passed away கடந்த நவம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வீண் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அறிவித்தார்.
இதை தொடர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். இதையடுத்து விஜயகாந்த்.உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. என தகவல் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மேலும் மியாட் மருத்துவமனையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார். விஜயகாந்த் மறைவினை அடுத்து தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.