Christian Churches Staff Welfare Board கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் விண்ணப்பிக்க
Work in Christian Churches Staff Welfare Board கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரிபவர்களுக்கான நலவாரியம்
Work in Christian Churches The government has ordered the formation of the Upadeshiyars and Staff Welfare Board.
கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவலாயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களைமாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், 6வது தளம், சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியரகம் இராஜாஜி சாலை, சென்னை-1 ல் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட சிறுபான்மையின நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். அவை:-
கல்வி உதவித்தொகை 10 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை 10 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000/- வழங்கப்படும் விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை ரூ.10,000/- உ முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும்.
இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000/- வழங்கப்படும்.
ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/- வழங்கப்படும்.
திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ. 5,000/. வழங்கப்படும்.
மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/- மற்றும் கருச்சிதைவு உதவித்தொகைரூ.3,000/- வழங்கப்படும்.
கருக்கலைப்பு கண்கண்ணாடி உதவித்தொகை ரூ.500/ – வழங்கப்படும்.
முதியோர் ஒய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000/- வழங்கப்படும்.
மேலும், விவரங்களை அறிந்து கொள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 6 வது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். கிறித்துவ தேவலாயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்
செய்திவெளியீடு:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை மாவட்டம்.