CINEMA

diwali release movies tamil இந்த வருடம் தீபாவளி ரிலீஸ் படங்கள் முழு விவரம்

Diwali 2023 Movie Release list தீபாவளி ரிலீஸ் படங்கள்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிக்கும் ’ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’, விக்ரம் பிரபுவின் ’ரெய்டு’ அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிடா’ படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

diwali release movies tamil
diwali release movies tamil

நடிகர் கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம்:-

நடிகர் கார்த்தியின் 25-ஆவது படமான ஜப்பான் திரைப்படத்தௌ ராஜூமுருகன் இயக்குகின்றார் இப்படத்தில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜப்பான் என்ற கொள்ளையன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் :-

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உருவாகியுள்ளது 10 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார்.

விக்ரம் பிரபு நடிப்பில் ரெய்டு திரைப்படம்:-

ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது,விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். எஸ்.பி.கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா,அனந்திகா, ரிஷி ரித்விக், செளந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரெய்டு’. படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் வசனங்களை இயக்குநர் முத்தையா எழுதியுள்ளார்.

பூ ராமு, காளி வெங்கட் நடிப்பில் கிடா திரைப்படம்:-

அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் கிடா இப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு தீசன் இசையமைத்துள்ளார்.

சல்மான்கான் நடிப்பில் டைகர் 3 திரைப்படம்:-

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘ஏக் தா டைகர்’. 2012ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2 ம் பாகமாக டைகர் ஜிந்தா ஹே’ என்ற படம் 2017-ல் வெளியானது. இதன் மூன்றாம் பாகமாக தற்போது ‘டைகர் 3’ உருவாகி வருகிறது. மணீஷ் சர்மா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்கு ப்ரிதம் இசையைமத்துள்ளார். இதில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button