dr priya serial actress death நிறைமாத கர்பினியாக இருந்த சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார்
Malayalam TV actor Dr Priya dies of cardiac arrest சீரியல் நடிகை பிரியா காலமானார்
கேரளாவில் சீரியல் நடிகையும் மருத்துவருமான நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35.

கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகை ப்ரியா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.இறந்தவுடன் அவருக்குப் பிறந்த குழந்தை அதே மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளது,
உயிரிழந்த நடிகை பிரியா மலையாள தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமானார் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை கைவிட்ட பிரியா, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துகொண்டே மருத்துவ மேற்படிப்பையும் மேற்கொண்டுவந்துள்ளார்.
அவரின் இறப்பு மலையாள தொலைக்காட்சித் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் பூஜாபுரத்தைச் சேர்ந்தவர் பிரியா(35). மலையாள சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா.
இவர் சீரியல் கடந்து சில மலையாள படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு பிரேக் கொடுத்தார் நடிகை பிரியா.திருமணாமாகி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நடிகை பிரியா இன்று (நவ.01) திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.