Game Changer Review Tamil ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் பட திரை விமர்சனம்
Game Changer Review Tamil ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் பட திரை விமர்சனம்
Game Changer Review Tamil ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் பட திரை விமர்சனம்
நடிகர்கள்:-
ராம் சரண் , எஸ் ஜே சூர்யா ,கியாரா அத்வானி, சுனில், பிரம்மானந்தம், ஜெயராம் ,அஞ்சலி ,ஸ்ரீகாந்த் ,சமுத்திரக்கனி
கதை:- கார்த்திக் சுப்புராஜ்
இசை:- தமன்
இயக்கம்:- ஷங்கர்
கதை களம்:-
தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ராம் நந்தன் (ராம் சரண்) உனது கோவத்தை இந்த சமூகத்தில் காட்டு என அவனை ஐபிஎஸ் படிக்கச் சொல்கிறார். அவரும் படித்து அதிகாரி தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். பதவியேற்ற உடனே ஊழல்வாதிகள் மீது ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க தொடங்குகிறார்.
தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார். இது ஊழலில் மூழ்கியிருக்கும் CM மகனான அமைச்சர் பாப்பிலி மோப்பிதேவிக்கு (எஸ்.ஜே. சூர்யா) பிடிக்கவில்லை. மேலும் தனது மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.
எனவே தனது ஒவ்வொரு செயலுக்கும் தடையாக இருக்கும் ராம் நந்தனை ஒழிக்க முடிவு செய்கிறார் மோப்பிதேவி. இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்டுகின்றது அதேபோல் அதிகாரத்திற்காக தனது தந்தையான ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியையே (ஸ்ரீகாந்த்) கொல்ல துணிகிறார். அப்பா செத்து விட்டால் அடுத்த முதல்வர் நான் தான் என அண்ணன் முனி மாணிக்கம் (ஜெயராம்) மற்றும் தம்பி மோப்பி தேவி (எஸ்.ஜே. சூர்யா) இருவரும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் போது பாலம் இடிந்து விழுகிறது. கரப்ஷன் நிறைந்த அரசாங்கம் காரணமாக அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது
ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM ஆகவும் தனது அரசியல் வாரிசாகவும் ராம் நந்தனை அறிவிக்கின்றார் அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆகின்றனர் மேலும் இது கட்சியில் யாருக்கும் பிடிக்கவில்லை. மேலும் ராம் நந்தன் முதல்வராக வருவதை தடுத்து நிறுத்தி, தானே முதல்வராகிறார் மோப்பிதேவி. ஆனால் ராம் நந்தன் விடுவதாக இல்ல. அவரும் மோப்பிதேவிக்கு பதிலடி கொடுக்கிறார். அங்கிருந்து இருவருக்கும் இடையே நேரடி போர் தொடங்குகிறது.
அதன்பின்பு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக புரமோஷன் வாங்கிக்கொண்டு விசாகப்பட்டினத்தில் வந்து இறங்குகிறார் ராம் சரண். இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்? ராம் நந்தன் யார்? அவரது ஃப்ளாஷ்பேக் என்ன? திடீரென்று ராம் நந்தனை ஏன் சத்தியமூர்த்தி முதல்வராக அறிவித்தார்? ஆந்திராவுக்கு நல்லாட்சி அமைந்ததா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.