CINEMA

hartik pandiya divorce தனது காதல் மனைவியை பிரிந்துவிட்டதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு..!

hartik pandiya divorce தனது காதல் மனைவியை பிரிந்துவிட்டதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு..!

hartik pandiya divorce
hartik pandiya divorce

செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரைக் காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த, தன் கணவரின் குடும்பப் பெயரான பாண்டியா என்பதை நீக்கி இருந்தார். இந்த நிலையில், தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிவதாக ஹார்திக் பாண்டியா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹார்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், 4 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, நடாஷாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்து எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம். இதுதான் எங்கள் இருவருக்கும் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை, நட்பு, நாங்கள் ஒரு குடும்பமாக இருந்ததால் இந்த முடிவு ஒரு கடினமான முடிவாகும். அகஸ்தியா எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அகஸ்தியாவை இருவரும் கவனித்துக் கொள்வோம். மேலும், அவருடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் கிடைக்க நாங்கள் ஒத்துழைப்போம். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் உண்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

After 4 years of being together, Natasa and I have decided to mutually part ways. We tried our best together and gave it our all, and we believe this is in the best interest for the both of us. This was a tough decision for us to make, given the joy, mutual respect and companionship we enjoyed together and as we grew a family.

We are blessed with Agastya, who will continue to be at the centre of both our lives and we will co-parent to ensure that we give him everything that we can for his happiness. We sincerely request your support and understanding to give us the privacy during this difficult and sensitive time.

hartik pandiya divorce

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் பன்னுங்க

Related Articles

Back to top button